‘உலக’ பைனல்: அம்பயர்கள் அறிவிப்பு | ஜூன் 08, 2021

தினமலர்  தினமலர்
‘உலக’ பைனல்: அம்பயர்கள் அறிவிப்பு | ஜூன் 08, 2021

துபாய்: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் பங்கேற்கும் அம்பயர்கள் விபரம் வெளியானது.

இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் வரும் 18–22ல் இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டன் மைதானத்தில் நடக்கவுள்ளது. இதில் பங்கேற்கும் அம்பயர்கள் குழு குறித்த அறிவிப்பு வெளியானது. இதன் படி, ஐ.சி.சி., எலைட் பேனல் பட்டியலில் இடம் பெற்ற ரிச்சர்டு இல்லிங்வொர்த், மைக்கேல் கப் என இருவரும் கள அம்பயர்களாக செயல்பட உள்ளனர்.

‘மேட்ச் ரெப்ரியாக’ கிறிஸ் பிராட், ‘டிவி’ அம்பயராக ரிச்சர்டு கெட்டில்பரோ, நான்காவது அம்பயராக அலெக்ஸ் வார்ப் செயல்பட காத்திருக்கின்றனர். கொரோனா பரவல் காரணமாக மற்றவர்கள் இங்கிலாந்து செல்வது, தனிமைப்படுத்துதல் பிரச்னை உள்ளதால், அம்பயர்கள் பட்டியலில் இடம் பெற்ற அனைவரும் இங்கிலாந்தை சேர்ந்தவர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.

மூலக்கதை