கிரிக்கெட் கற்க ‘கிரிக்குரு’: சேவக் புது முயற்சி | ஜூன் 09, 2021

தினமலர்  தினமலர்
கிரிக்கெட் கற்க ‘கிரிக்குரு’: சேவக் புது முயற்சி | ஜூன் 09, 2021

புதுடில்லி: ‘ஆன்லைன்’ வழியாக கிரிக்கெட் கற்றுக் கொள்ள ‘கிரிக்குரு’ இணையதளத்தை அறிமுகப்படுத்தினார் சேவக்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் துவக்க வீரர் சேவக் 42. டில்லியை சேர்ந்த இவர், 104 டெஸ்ட் (8586 ரன்), 251 ஒருநாள் (8273 ரன்), 19 சர்வதேச ‘டுவென்டி–20’ (394 ரன்) போட்டிகளில் விளையாடி உள்ளார்.

கிரிக்கெட் வீரராக மாற ஆர்வமாக உள்ள இளைஞர்கள், ‘ஆன்லைன்’ வழியாக கிரிக்கெட் விளையாட்டை கற்றுக் கொள்ளவும், பயிற்சி பெறவும் ‘கிரிக்குரு’ என்ற அலைபேசி–இணையம் அடிப்படையிலான செயலி, வலைதளத்தை சேவக் அறிமுகப்படுத்தினார். இதற்கான பாடத்திட்டத்தை சேவக், இந்திய அணியின் முன்னாள் வீரர், பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் இணைந்து தயாரித்துள்ளனர்.

இதன் சிறப்பம்சங்கள்: லாரா, டிவிலியர்ஸ், பிரட் லீ, கெய்ல், ஜான்டி ரோட்ஸ், ஹர்பஜன் சிங், டுவைன் பிராவோ உட்பட 34 அனுபவ வீரர்களிடம் ஆலோசனை வழங்கப்படும். வெற்றி, தோல்வி போன்றவற்றை எப்படி கையாண்டது என்பது குறித்து பிரபல வீரர்களிடம் இருந்து நேரடி அனுபவத்தை பெறலாம்.

இதுகுறித்து சேவக் கூறுகையில், ‘‘இந்த செயலி மூலம் இந்தியாவில் கிரிக்கெட் விளையாட்டை கற்றுக் கொள்வதை அதிகப்படுத்தலாம். சர்வதேச போட்டிகளில் விளையாட ஆர்வமுள்ள இளம் வீரர்களுக்கு பயிற்சி அனுபவத்தை வழங்குவதற்காக உலகெங்கிலும் உள்ள பயிற்சி நிபுணர்கள் ஆலோசனை வழங்குவர்,’’ என்றார்.

மூலக்கதை