‘ஹால் ஆப் பேம்’ கவுரவம் * ஐ.சி.சி., புது முடிவு | ஜூன் 10, 2021

தினமலர்  தினமலர்
‘ஹால் ஆப் பேம்’ கவுரவம் * ஐ.சி.சி., புது முடிவு | ஜூன் 10, 2021

துபாய்: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலை கொண்டாடும் விதமாக ஐ.சி.சி., ‘ஹால் ஆப் பேம்’ பட்டியலில் ஒரே நேரத்தில் 10 வீரர்கள் சேர்க்கப்பட உள்ளனர்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.,), ‘ஹால் ஆப் பேம்’ பட்டியலில் சாதனை படைத்த நட்சத்திரங்கள்,இடம் பெறுவர். இந்தியா சார்பில் 2009ல் பிஷன் சிங் பேடி, கபில் தேவ், கவாஸ்கர், 2015ல் கும்ளே, 2018ல் டிராவிட், 2019ல் சச்சின் என ஆறு வீரர்கள் இந்த கவுரவத்தை பெற்றனர். இதுவரை 93 பேர் இந்த பட்டியலில் உள்ளனர்.

தற்போது ஒரே நேரத்தில் 10 வீரர்களை இந்த பட்டியலில் சேர்க்க ஐ.சி.சி., முடிவு செய்துள்ளது. துவக்க கால கிரிக்கெட் (1918 க்கு முன்), உலகப் போர் (1918–1945), உலகப் போருக்குப் பின் (1946–1970), ஒருநாள் போட்டி காலம் (1971–1995), நவீன கிரிக்கெட் (1996–2016) என ஐந்து பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இணையதள வழியாக ஓட்டு நடத்தி ஒவ்வொரு பிரிவிலும் இருந்தும் தலா 2 பேர், என 10 சிறந்த வீரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இறுதி முடிவு ஜூன் 13ல் தெரியவரும்.

மூலக்கதை