மான்செஸ்டர் அணியில் ஹர்மன்பிரீத் கவுர் | ஜூன் 10, 2021

தினமலர்  தினமலர்
மான்செஸ்டர் அணியில் ஹர்மன்பிரீத் கவுர் | ஜூன் 10, 2021

லண்டன்: இங்கிலாந்தில் நடக்கவுள்ள ‘தி ஹன்ட்ரடு’ தொடரில் இந்திய வீராங்கனை ஹர்மன்பிரீத் கவுர், மான்செஸ்டர் அணியில் இடம் பிடித்துள்ளார்.

இங்கிலாந்து, வேல்ஸ் கிரிக்கெட் போர்டு (இ.சி.பி.,) சார்பில் ‘தி ஹன்ட்ரடு’ (தலா 100 பந்து கொண்ட போட்டி) தொடர் அறிமுகப்படுத்தப்படுகிறது. கடந்த ஆண்டு ‘கொரோனா’ பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட இதன் முதல் சீசன் வரும் ஜூலை 21ல் துவங்குகிறது. இதில் மான்செஸ்டர், லண்டன், பர்மிங்காம் உள்ளிட்ட தலா 8 ஆண்கள், பெண்கள் அணிகள் பங்கேற்கின்றன.

இத்தொடரில், இந்திய ‘டுவென்டி–20’ அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா, ‘ஆல்–ரவுண்டர்’ தீப்தி சர்மா, துவக்க வீராங்கனை ஷபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ் என, 5 இந்திய வீராங்கனைகள் விளையாடுகின்றனர். இதில் ஹர்மன்பிரீத் ‘மான்செஸ்டர் ஒரிஜினல்ஸ்’ அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஷபாலி வர்மா, ‘பர்மிங்காம் போனிக்ஸ்’ அணி சார்பில் களமிறங்குகிறார். மந்தனா, ஜெமிமா ரோட்ரிக்ஸ்  ‘நார்தன் சூப்பர்சார்ஜர்ஸ்’ அணிக்காக விளையாடுகின்றனர். தீப்தி சர்மா ‘லண்டன் ஸ்பிரிட்’ அணி சார்பில் பங்கேற்கிறார்.

இதுகுறித்து ஹர்மன்பிரீத் கூறுகையில், ‘‘இங்கிலாந்தில் நடக்கவுள்ள ‘தி ஹன்ட்ரடு’ தொடரில் விளையாட இருப்பது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்காக நீண்ட நாட்கள் காத்திருக்க முடியாது. மிகப் பெரிய மைதானங்களில் விளையாட இருப்பது சிறப்பு. இது, சிறந்த அனுபவமாக அமையும்,’’ என்றார்.

மூலக்கதை