அமெரிக்காவின் அரிஸோனா மாநிலத்தை மிரட்டி வரும் காட்டுத் தீ!: 1.5 லட்சம் ஏக்கர் வனப்பகுதி சாம்பல்..!!

தினகரன்  தினகரன்
அமெரிக்காவின் அரிஸோனா மாநிலத்தை மிரட்டி வரும் காட்டுத் தீ!: 1.5 லட்சம் ஏக்கர் வனப்பகுதி சாம்பல்..!!

வாஷிங்டன்: அமெரிக்காவின் அரிஸோனா மாநில வனப்பகுதியில் 2 இடங்களில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய காட்டுத் தீயை கட்டுப்படுத்த முடியாமல் அம்மாநில தீயணைப்புத் துறையினர் திணறி வருகின்றனர். அடர்ந்த வனப்பகுதியை கொண்ட அரிஸோனா மாநிலத்தில் கடந்த திங்கள் அன்று டெசர்ட் ஹில் கவுண்டி, சான்கார்லூஸ் ஆகிய வனப்பகுதிகளில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பலத்த காற்றின் காரணமாக மற்ற பகுதிகளுக்கும் தீவிரமாக பரவி வருகிறது. பெரும் வழியில் உள்ள புல்வெளிகள், செடி கொடிகள், அறிய மரங்களை அழித்தபடி தீ முன்னேறி சென்று கொண்டிருக்கிறது. பற்றி எரியும் காட்டுத் தீயை கட்டுக்குள் கொண்டு வர அரிஸோனா மாநில தீயணைப்புத் துறையினர் போராடி வருகின்றனர். தரை மற்றும் வான் வழியே தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் முடிக்கிவிடப்பட்டுள்ளன. கடந்த 5 நாட்களில் 2 இடங்களில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீ 1 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான வனப்பகுதிகளை  சாம்பலாக்கி இருப்பதாக அரிஸோனா மாநில ஆளுநர் தெரிவித்துள்ளார். காட்டுத் தீ பரவி வரும் வழித்தடங்களில் உள்ள வீடுகள் மற்றும் பண்ணை நிலங்களில் உள்ளவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டு வருகின்றனர். காட்டுத் தீயை கட்டுப்படுத்தும் பணிகளில் 1,600 தீயணைப்பு படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.  அரிஸோனா மாநிலத்தில் கோடை காலத்தில் சிறிய அளவில் காட்டுத் தீ ஏற்படுவது இயல்பு என்ற போதிலும் பெருமளவு ஏற்படுவது இதுவே முதல்முறை. தீ விபத்துக்கான காரணம் குறித்து அரிஸோனா வனத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மூலக்கதை