உணவு வணிகங்களுக்கு புதிய கட்டுப்பாடு

தினமலர்  தினமலர்
உணவு வணிகங்களுக்கு புதிய கட்டுப்பாடு

புதுடில்லி:உணவு வணிகங்கள், அக்டோபர் 1ம் தேதி முதல், இன்வாய்ஸ் அல்லது பில்களில், இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையமான எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., பதிவு எண்ணை அல்லது உரிம எண்ணை கட்டாயமாக குறிப்பிடப்பட வேண்டும் என அறிவிக்கப் பட்டுள்ளது.
இது குறித்து தற்போது புதிய ஆணையை வெளியிட்டுள்ளது,ஆணையம்.உணவு பொருட்கள் குறித்து நுகர்வோர் புகார்கள் வழங்கும்போது, தேவையான தகவல்கள் தருவதில் அவர்களுக்கு போதாமை இருக்கிறது.இனி அவர்கள் குறிப்பிட்ட உணவு வணிகம் குறித்து புகார் வழங்கும்போது, இந்த எண்ணை குறிப்பிட்டு புகார் வழங்க முடியும்.இதன் மூலம் எளிதாக வணிகத்தை அடையாளம் காண இயலும் என, ஆணையம் தெரிவித்துள்ளது.

மேலும், உரிமம் மற்றும் பதிவு துறையினர், உணவு வணிகங்கள் இந்த புதிய ஆணையை செயல்படுத்துவது குறித்து, பெரிய அளவில் அனைவருக்கும் தெரியப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. இந்த எண்ணை குறிப்பிடுவதன் மூலம், நுகர்வோருக்கு விழிப்புணர்வு அதிகரிக்கும் என்றும்; அவ்வாறு குறிப்பிடாதவை பாதுகாப்பு தரம் அற்றவை என்பதை அறிந்து கொள்ள முடியும் என்றும் ஆணையம் கூறியுள்ளது.

மூலக்கதை