வாடிக்கையாளர்கள் தேவையை ஆன்லைன் மூலம் செய்யும் பிஎஸ்ஹெச் ஹோம் அப்ளையன்சஸ்

தினமலர்  தினமலர்
வாடிக்கையாளர்கள் தேவையை ஆன்லைன் மூலம் செய்யும் பிஎஸ்ஹெச் ஹோம் அப்ளையன்சஸ்

ஐரோப்பாவின் மிகப்பெரிய வீட்டு உபயோகக் கருவிகள் தயாரிப்பாளர் மற்றும் துறை சார்ந்த உலகின் வெற்றிகரமான நிறுவனங்களுள் ஒன்று பிஎஸ்ஹெச் ஹோம் அப்ளையன்ஸ்ஸ். தற்போது நிலவும் கொள்ளை நோய் காரணமாக மாறிவரும் சூழலுக்கேற்ப, வாடிக்கையாளர் சேவையை ஆன்லைனுக்கு மாற்றிக் கொண்டுள்ளது.

2020 மார்ச் தொடங்கி இந்நிறுவனம் இதுவரை நாடு முழுவதும் 22000 வாடிக்கையாளர்களின் தேவையை ஆன்லைன் சேவை மூலம் நிறைவு செய்துள்ளது. கடந்த 3 மாதங்களில் மட்டும் தென் இந்தியாவில் மெய்நிகராக 72% சேவைகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன. இவற்றுள் சென்னை (17.8%), கொச்சி (38.1%), கோவை (4%), பெங்களூரு (27%) மற்றும் ஐதராபாத் (12%) உள்ளிட்ட நகரங்கள் அடங்கும்.

பல நகரங்களில் கடுமையான பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வாடிக்கையாளர்கள் கருவிகள் வாங்குதல், நிறுவுதல் மற்றும் பழுது நீக்கல் ஆகிய சேவைகளுக்குத் தொலைநிலைச் சேவையாக ஆன்லைனுக்கு முழுமையாக மாறியுள்ளனர். வாடிக்கையாளர் தேவை மற்றும் நடத்தைக்கு ஏற்றவாறு மாற்றிக் கொள்ளவும், அதே சேவைத் தரத்துக்கு இணங்கவும், பிஎஸ்ஹெச் உடனடியாக ஆன்லைன் ஆலோசனையை ஏற்றுக் கொண்டு மாறிக் கொண்டது.

சேவை வழிகாட்டுதல்களைத் தவறாமல் பொறியாளர்கள் கடைப்பிடித்ததுடன், காணொலி மற்றும் கைபேசி அழைப்புகள் மூலம் வாடிக்கையாளர்களுக்கு உடனடி தீர்வுகளையும் வழங்கினர். வாடிக்கையாளர்களுக்கு வழங்கிய உறுதிமொழியை நிறைவு செய்ய பிஎஸ்ஹெச் தனது அனைத்துப் பொருள்கள் மீதான வாரண்டியை 2021 ஜூன் 30 வரை நீட்டித்துள்ளது. இந்த நீட்டிக்கப்பட்ட வாரண்டி பொது முடக்கக் காலமான 2021 ஏப்ரல் 15 முதல் மே 31க்குள் காலாவதியான அனைத்துப் பொருள்கள் மீதான வாரண்டிக்கும் பொருந்தும்

இது குறித்து பிஎஸ்ஹெச் ஹோம் அப்ளையன்சஸ் எம்டி அண்ட் சிஇஓ நீரஜ் பாஹி கூறுகையில் ‘கொள்ளை நோய்க் காலத்தில் எங்களது அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் தொலை இயக்கமாகத் தேவையான அனைத்து சேவைகளையும் வழங்கிய எங்கள் பிஎஸ்ஹெச் வாடிக்கையாளர் சேவைக் குழு குறித்துப் பெருமைப்படுகிறேன். டிஜிடல் வாழ்க்கை வாழப் புது வகை கொரோனா வைரஸ் மக்களைத் தூண்டியுள்ள நிலையில், மனித பண்புடன் மெய்நிகர் அனுபவத்தை வணிகங்களில் புகுத்த வேண்டியது கட்டாயம் என்பதால் பிஎஸ்ஹெச்-இல் அதை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம். பிஎஸ்ஹெச் நிறுவனத்துக்குத் தென் இந்தியா முக்கியச் சந்தை என்பதால் எங்களது உண்மையான வாடிக்கையாளர்களுக்குத் தரமான சேவையைத் தொடர்ந்து வழங்குவோம்’ என்றார்.

மூலக்கதை