டாடா டிஜிட்டல் வசமாகிறது 1 எம்.ஜி., நிறுவனம்

தினமலர்  தினமலர்
டாடா டிஜிட்டல் வசமாகிறது 1 எம்.ஜி., நிறுவனம்

புதுடில்லி:‘டாடா டிஜிட்டல்’ நிறுவனம், 1 எம்.ஜி., நிறுவனத்தின் பெரும்பான்மையான பங்குகளை கையகப்படுத்த உள்ளது.‘டாடா சன்ஸ்’ குழுமத்துக்கு சொந்தமானது, ‘டாடா டிஜிட்டல்’ நிறுவனம்.இந்நிறுவனம், மின்னணு வர்த்தகத்தில் அதிக கவனம் எடுத்து வருகிறது.

டாடா நிறுவனம் வாகனத்திலிருந்து உப்பு வரை அதன் அனைத்து தயாரிப்புகளையும் ஒரே மின்னணு தளத்தில் கிடைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதற்காக மெகா செயலியையும் உருவாக்கி வருகிறது.இதன் ஒரு பகுதியாக, மருந்து உள்ளிட்ட ஆரோக்கியம் சார்ந்த பிரிவிலும் கால்பதிக்க திட்டமிட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக, முன்னணி இ – ஹெல்த் நிறுவனமான 1எம்.ஜி., நிறுவனத்தின் பெரும்பான்மையான பங்குகளை கையகப்படுத்த உள்ளது.இருப்பினும், எவ்வளவு ரூபாய்க்கு கையகப்படுத்த உள்ளது என்பது குறித்து தெரிவிக்கப்படவில்லை. ஆனாலும் 550 கோடி ரூபாயை டாடா முதலீடு செய்ய இருப்பதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மருத்துவ பிரிவில் இ – பார்மஸி, இ – டயக்னாஸ்டிக், டெலி கன்சல்ட்டேசன் ஆகிய பகுதிகள் முக்கியத்துவம் வாய்ந்தவை என்றும், இவை வேகமாக வளர்ச்சி காணும் வகையில் இருப்பதாகவும், ‘டாடா டிஜிட்டல்’ தெரிவித்துள்ளது. இத்துறையானது 7,300 கோடி ரூபாய் சந்தை மதிப்பு கொண்டதாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.கடந்த 2015ல் துவங்கப்பட்ட 1 எம்.ஜி., நிறுவனம், இ – ஹெல்த் பிரிவில் முன்னணி வகிக்கும்நிறுவனங்களில் ஒன்றாக இருக்கிறது.

மூலக்கதை