கிரேஸி மோகன் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி : கமல் உருக்கம்

தினமலர்  தினமலர்
கிரேஸி மோகன் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி : கமல் உருக்கம்

மேடை நாடகங்களிலும், சினிமாவிலும் ஏராளமான நகைச்சுவைகளை அள்ளித் தெளித்தவர் மறைந்த நடிகர், வசனகர்த்தா என பல பரிமாணங்களை கொண்ட கிரேஸி மோகன். கடந்த 2019ல் இதே நாளில் அவர் மறைந்தது நாடக மற்றும் திரையுலகினர் இடையே பேரிடியாக அமைந்தது.

பேச்சுவாக்கில் நகைச்சுவையை அடுக்கி கொண்டே போகும் கிரேஸி மோகன் இன்று நம்மோடு இல்லை. கிரேஸி மோகன் இந்த மண்ணை விட்டு மறைந்தாலும் அவர் கொடுத்து சென்ற நகைச்சுவை என்றும் அழியாதவை. நடிகர் கமல்ஹாசனின் நெருங்கிய நட்பு வட்டத்தில் கிரேஸி மோகன் முக்கியமானவர். இவர்களது கூட்டணியில் வெளியான படங்களின் நகைச்சுவை இன்றும் மறக்க முடியாதது.

இந்நிலையில் கிரேஸி மோனின் நினைவுநாளையொட்டி கமல் டுவிட்டரில், ‛‛நாடகமே உலகம் என்கிற ஞானச்சொல்லை, நகைச்சுவை நாடகமே உலகம் என்று மாற்றியவர். சிரிப்பு முகமூடிக்குள் தீவிர மரபிலக்கிய முகத்தோடு வானம் போல் வாழ்ந்து மறைந்தவர் கிரேஸி மோகன். இரண்டாம் நினைவு நாளில் அவரை நினைவு கூர்கிறேன்'' என பதிவிட்டுள்ளார்.

மூலக்கதை