மீண்டும் திருமணமா? - வனிதா மறுப்பு

தினமலர்  தினமலர்
மீண்டும் திருமணமா?  வனிதா மறுப்பு

நடிகை வனிதா விஜயகுமார் ஆகாஷ், ஆனந்தராஜன் ஆகியோரை திருமணம் செய்து விவாகரத்து செய்தார். கடந்தாண்டு கொரோனா தாக்கத்தின் இடையே, பீட்டர்பால் என்பவரை 3வதாக திருமணம் செய்தார். பின்னர் அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவரை பிரிந்தார். தற்போது வடஇந்தியாவை சேர்ந்த விமானி ஒருவரை நான்காவதாக திருமணம் செய்து கொண்டதாக தகவல் பரவியுள்ளது. இதை வனிதா மறுத்துள்ளார்.

டுவிட்டரில் அவர் கூறுகையில், ‛உங்கள் அனைவருக்கும் ஒன்றை தெரியப்படுத்த விரும்புகிறேன். நான் இப்போதும் சிங்கிளாகவே இருக்கிறேன். இப்படியே இருக்க விரும்புகிறேன். எந்தவொரு வதந்தியையும், பரப்பவோ, நம்பவோ வேண்டாம்' எனக் கூறியுள்ளார். அத்துடன் ‛அன்பே சிவம்' என மார்பில் பச்சைக்குத்திய தன் படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார்.

மூலக்கதை