28 மனைவிகள் ஆசிர்வாதத்துடன் 37வது திருமணம் செய்த முதியவர்: 135 பிள்ளைகள், 126 பேரப்பிள்ளைகள் கொண்டாட்டம்

தினகரன்  தினகரன்
28 மனைவிகள் ஆசிர்வாதத்துடன் 37வது திருமணம் செய்த முதியவர்: 135 பிள்ளைகள், 126 பேரப்பிள்ளைகள் கொண்டாட்டம்

புதுடெல்லி:  ஏற்கனவே 36 பெண்களை மணந்தவர், 28 மனைவிகள், பிள்ளைகள், பேரப்பிள்கைள் புடைசூழ 37வது திருமணம் செய்த  வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.  திருமணத்துக்கு  பின் ஆண்கள் படாதபாடு படுவதாக பொதுவான கருத்து உ ள்ளது. இது  குறித்து வரும்  மீம்ஸ்களை பார்க்கும்போது சிரிப்பை காட்டிலும் இது உண்மைதான் என்றே  நினைக்கத் தோன்றும். ஒரு மனைவியை சமாளிப்பதே பெரிய விஷயம் என்று இன்றைய ஆண்கள் புலம்பும் நிலையில், முதியவர் ஒருவர் 37வது திருமணம் செய்து கொண்டதாக வீடியோ ஒன்று  சமூக வலைதளங்களில் வைரலானது.  இந்த வீடியோவை ஐபிஎஸ் அதிகாரி ருபின் சர்மா  என்பவர்  தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதனுடன், ‘தைரியமான  மனிதர்  28 மனைவிகள், 135 பிள்ளைகள், 126 பேரப்பிள்கைள் முன்னிலையில்  37வது திருமணம் செய்து கொள்கிறார்,’ என குறிப்பிட்டு இருந்தார்.  இந்த  திருமணம் எங்கு நடந்தது? எப்போது நடந்தது? என்பது போன்ற விவரங்கள் இல்லை.  ஆனால், ஐபிஎஸ் அதிகாரி என்பதால் உண்மையாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.

மூலக்கதை