ஊரடங்கால் விற்க முடியாமல் தவித்த விவசாயி 5 டன் தர்பூசணி பழங்களை விலைக்கு வாங்கிய ராணுவம்

தினகரன்  தினகரன்
ஊரடங்கால் விற்க முடியாமல் தவித்த விவசாயி 5 டன் தர்பூசணி பழங்களை விலைக்கு வாங்கிய ராணுவம்

ராம்கர்:   ஜார்க்கண்ட் மாநிலத்தின் போகரோ மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரஞ்சன் குமார் மஹ்தோ. பட்டதாரியான இவருக்கு வேலை கிடைக்கவில்லை. இதனால், 25 ஏக்கர் நிலத்தை குத்தகை எடுத்து விவசாயம் செய்து வருகிறார். இவருடைய தோட்டத்தில் 5 டன் தர்பூசணி விளைந்தது. ஆனால், ஊரடங்கால் விற்க முடியாமல் அவதிப்பட்டார். அவற்றை ராணுவ வீரர்களுக்கு இலவசமாக வழங்க முடிவு செய்தார். தனது வீட்டுக்கு அருகில் உள்ள ராணுவ முகாமுக்கு சென்று, ‘ராணுவ வீரர்களுக்காக இலவசமாக 5 டன் தர்பூசணியை வழங்குகிறேன். பெற்றுக் கொள்ள முடியுமா?’ என்று கேட்டார்.   இதனால் நெகிழ்ந்த ராணுவ தலைமை அதிகாரி குமார், அனைத்து தர்பூசணிகளையும் விலை கொடுத்து வீரர்களுக்காகப் பெற்றுக் கொண்டுள்ளார்.  ‘ரஞ்சனின் தோட்டத்துக்கு நேரடியாக சென்று பார்வையிட்டோம்.  அங்கு பெண்கள் உள்பட பலர் வேலை செய்து கொண்டிருந்தனர். தர்பூசணிகள் நிறைந்து கிடந்தன. உடனே, சந்தை மதிப்புக்கே பணம் கொடுத்து பெற்றுக் கொண்டோம். நாட்டுக்காக போராடும் ராணுவ வீரர்களுக்கு என்னுடைய தாழ்மையான பரிசு என்று அவர் சொன்ன விதம் மனதைத் தொட்டது’ என்று கூறியுள்ளார் பிரிகேடியர் குமார்.

மூலக்கதை