கொரோனா விதிகளை கர்நாடக முதல்வர் மகன் மீறினாரா? அறிக்கை கொடுக்க ஐகோர்ட் உத்தரவு

தினகரன்  தினகரன்
கொரோனா விதிகளை கர்நாடக முதல்வர் மகன் மீறினாரா? அறிக்கை கொடுக்க ஐகோர்ட் உத்தரவு

பெங்களூரு:  கர்நாடக மாநிலத்தில்  கொரோனா பரவல் கராணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், வழிபாட்டு ஸ்தலங்கள் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மைசூரு மாவட்டம், நஞ்சன்கூடு தாலுகாவில்  உள்ள புகழ் பெற்ற ஸ்ரீகண்டேஷ்வரசுவாமி கோயிலுக்கு முதல்வர் எடியூரப்பா மகன்  விஜயேந்திரா சென்று சாமி தரிசனம் செய்ததுடன் கபிலா நதியோரத்தில் சிறப்பு  பூஜை நடத்தினார். இதுதொடர்பான புகைப்படத்துடன் செய்தி வெளியானதை அடிப்படையாக வைத்து கர்நாடக உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு  செய்தது. இவ்வழக்கு தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு முன் நேற்று  விசாரணைக்கு வந்தது. அப்போது மாநில அரசு வக்கீலிடம்,  ‘ஊரடங்கு அமல்படுத்தி உள்ளபோது, முதல்வர் மகனுக்கு மட்டும்  கோயிலில் சாமிதரிசனம் செய்ய எப்படி அனுமதி வழங்கப்பட்டது. சாமானியருக்கு  ஒரு நீதி, அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு ஒரு நீதியா?. இது தொடர்பாக முழுமையாக விசாரணை  நடத்தி விரிவான அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று  மைசூரு மாவட்ட நிர்வாகத்திற்கு நீதிபதிகள் உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்தனர்

மூலக்கதை