குறை தீர்ப்பு அதிகாரி நியமனம் மத்திய அரசின் எச்சரிக்கைக்கு பணிந்தது டிவிட்டர் நிர்வாகம்: ஒப்பந்த அடிப்படையில் செய்ததால் சர்ச்சை

தினகரன்  தினகரன்
குறை தீர்ப்பு அதிகாரி நியமனம் மத்திய அரசின் எச்சரிக்கைக்கு பணிந்தது டிவிட்டர் நிர்வாகம்: ஒப்பந்த அடிப்படையில் செய்ததால் சர்ச்சை

புதுடெல்லி: மத்திய அரசு விடுத்த இறுதி எச்சரிக்கையை தொடர்ந்து, இந்திய மக்களின் குறைகளை தீர்க்க சிறப்பு அதிகாரிகளை டிவிட்டர் நிர்வாகம் நியமித்துள்ளது.  இந்தியாவில் வாட்ஸ்அப், டிவிட்டர், இன்ஸ்டராகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களை பயன்படுத்தும் பல கோடி பயனாளர்கள் அளிக்கும் புகார்களை விசாரிக்க, சிறப்பு குறை தீர்ப்பு அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என மத்திய அரசு புதிய சட்டம் கொண்டு வந்தது. இதை டிவிட்டர் மட்டும் ஏற்க மறுத்தது. இதனால், டிவிட்டருக்கு இறுதி எச்சரிக்கை விடுத்து கடந்த 5ம் தேதி  மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியது. அதில், ‘இந்த இறுதி எச்சரிக்கையை மீறினால், இந்திய தகவல் தொழில்நுட்ப சட்டங்கள் மற்றும் குற்றவியல் சட்டங்களின்படி தங்கள் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,’ என கூறப்பட்டது. தற்போது, மத்திய அரசின் இந்த எச்சரிக்கைக்கு டிவிட்டர் பணிந்துள்ளது. குறை தீர்ப்பு அதிகாரிகளை நியமித்து இருப்பதாக, மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளது. ஆனால், இவர்கள் ஒப்பந்்தப் அடிப்படையில் நியமிக்கப்பட்டதற்கு மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதனால், விரைவில் இந்தியாவில் வசிப்பவரை நிரந்தரமாக நியமிப்பதாக டிவிட்டர் உறுதி அளித்துள்ளது. 

மூலக்கதை