எல்லையில் ஊடுருவிய சீனர் கைது

தினகரன்  தினகரன்
எல்லையில் ஊடுருவிய சீனர் கைது

கொல்கத்தா: இந்தியா-வங்கதேசத்தின் சர்வதேச எல்லையில் மேற்கு வங்கத்தில் அமைந்துள்ள மால்டா மாவட்டம் அருகே, நேற்று ஒரு மர்ம நபர் உள்ளே நுழைய முயன்றார். இதை கவனித்த எல்லை பாதுகாப்பு படையினர், உடனே அந்த நபரை சுற்றி வளைத்து கைது செய்தனர்.இது குறித்து பாதுகாப்பு படை அதிகாரிகள் கூறுகையில், ‘‘நேற்று காலை 7 மணியளவில் கறுப்பு டீ சர்ட், பேண்ட், ஷூ அணிந்த ஒரு நபர் உள்ளே நுழைய முயன்றதைக் கண்டு கைது செய்தோம். கைதான நபரிடமிருந்து சீன பாஸ்போர்ட், லேப்டாப், மூன்று மொபைல் போன்கள், சிம் கார்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளது. வங்கதேசம் வருவதற்கான விசாவையே வைத்திருந்தார். உள்ளூர் போலீஸ் அதிகாரிகளுடன் உளவுத்துறையும் அவரை விசாரித்து வருகிறது. அவருக்கு  ஆங்கிலம் புரியாததால் சீன மொழி பேச தெரிந்த அதிகாரி மூலமாக விசாரணை நடத்தப்படும்,’’ என்றார்.

மூலக்கதை