இந்தியாவின் கடும் எதிர்ப்பையும் மீறி ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அடுத்த மாதம் தேர்தல்: பாகிஸ்தான் அறிவிப்பு

தினகரன்  தினகரன்
இந்தியாவின் கடும் எதிர்ப்பையும் மீறி ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அடுத்த மாதம் தேர்தல்: பாகிஸ்தான் அறிவிப்பு

இஸ்லாமாபாத்: இந்தியாவின் கடும் எதிர்ப்பை மீறி ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஜூலை 25ம் தேர்தல் நடத்தப்படும் என்று பாகிஸ்தான் அறிவித்துள்ளது.  ஒருங்கிணைந்த ஜம்மு - காஷ்மீரின் ஒரு பகுதி பாகிஸ்தான் கட்டுப்பாட்டிலும், மற்றொரு பகுதி சீனாவின் கட்டுப்பாட்டிலும் இருந்து வருகிறது. பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள் ‘பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்’ என்று அழைக்கப்படுகிறது. இது, காஷ்மீரின் ஒரு பகுதி என இந்தியா கூறி வருகிறது. மேலும், ராணுவ ரீதியாக ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியின் அரசியல் நிலையை மாற்றும் எந்த நடவடிக்கையில் ஈடுபடக் கூடாது என்றும் பாகிஸ்தானுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில், ஆக்கிரமிப்பு  காஷ்மீரில் பொதுத்தேர்தல் நடத்த பாகிஸ்தான் அரசு முடிவு செய்தது. அதற்கு அந்நாட்டு உச்ச நீதிமன்றமும் அனுமதி வழங்கியுள்ளது. இதற்கு,  இந்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்நிலையில், கொரோனா வைரஸ் காரணமாக 2 மாதங்களுக்கு தேர்தலை ஒத்திவைக்குமாறு எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்திருந்த நிலையில், ஜூலை 25ம் தேதி பொதுத்தேர்தல் நடக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைமை தேர்தல் ஆணையர் அப்துல் ராஷீத் கூறுகையில், ‘‘அடுத்த மாதம் 25ம் தேதி பொதுத்தேர்தல் நடைபெறுகிறது. 45 பிரதிநிதிகள் தேர்வு செய்வதற்காக நடக்கும் தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் செய்ய ஜூன் 3ம் தேதி கடைசி நாள். இறுதி வேட்பாளர் பட்டியல் ஜூலை 3ம் தேதி வெளியிடப்படும்,’’ என்றார்.

மூலக்கதை