ஷாங்காய் திரைப்பட விழாவில் 'கூழாங்கல்'

தினமலர்  தினமலர்
ஷாங்காய் திரைப்பட விழாவில் கூழாங்கல்

பிஎஸ் வினோத்ராஜ் இயக்கத்தில் யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில் செல்லபாண்டி, கருத்தடையான் மற்றும் பலர் நடித்துள்ள படம் 'கூழாங்கல்'. இப்படத்தை விக்னேஷ் சிவன், நயன்தாரா ஆகியோரின் தயாரிப்பு நிறுவனமான ரவுடி பிக்சர்ஸ் வெளியிட உள்ளது.

ரோட்டர்டாம் 50வது சர்வதேசத் திரைப்பட விழாவில் இந்தப் படம் கலந்து கொண்டு டைகர் விருதைப் பெற்றது. இந்த விருதைப் பெற்ற முதல் தமிழ்ப் படம் 'கூழாங்கல்'. இப்படம் மேலும் சில சர்வதேசத் திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டது. அடுத்து இப்படம் ஜுன் 11 முதல் ஜுன் 20 வரையில் நடைபெற உள்ள ஷாங்காய் சர்வதேசத் திரைப்பட விழாவில் திரையிடப்பட உள்ளது. பெருமையும் மரியாதையுமாக உள்ளது என இது குறித்து படத்தை வெளியிடும் இயக்குனர் விக்னேஷ் சிவன் குறிப்பிட்டுள்ளார்.

காதலர்களான இயக்குனர் விக்னேஷ் சிவன், நயன்தாரா இருவரது தயாரிப்பு நிறுவனமான ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் 'நெற்றிக்கண், காத்துவாக்குல ரெண்டு காதல்' ஆகிய படங்களையும் தயாரித்து வருகிறது. 'கூழாங்கல்' படத்தைப் போலவே 'ராக்கி' என்ற படத்தையும் வாங்கி வெளியிட உள்ளது.

மூலக்கதை