விவசாய பொருட்கள் ஏற்றுமதி 17.34 சதவீதம் அதிகரிப்பு

தினமலர்  தினமலர்
விவசாய பொருட்கள் ஏற்றுமதி 17.34 சதவீதம் அதிகரிப்பு

புதுடில்லி:நாட்டின் விவசாயம் மற்றும் அது சார்ந்த பொருட்களின் ஏற்றுமதி, கடந்த நிதியாண்டில், 17.34 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த வளர்ச்சி, நடப்பு நிதியாண்டிலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த நிதியாண்டில், 3.01 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு விவசாய பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. பாஸ்மதி அல்லாத அரிசி வகைகள், கோதுமை, தினை, மக்காச்சோளம் மற்றும் பிற தானியங்கள் போன்றவை அதிகளவில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்கா, சீனா, ஐக்கிய அரபு நாடுகள், வியட்னாம், இந்தோனேஷியா, மலேஷியா, ஈரான் போன்ற நாடுகளுக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.கடந்த நிதியாண்டில் முதன் முறையாக, பல்வேறு புதிய பகுதிகளிலிருந்தும் ஏற்றுமதி நடைபெற்றுள்ளது. உத்தர பிரதேசம் வாரணாசியிலிருந்து காய்கறிகள், மாம்பழம் ஆகியவையும்; சந்தாலியிலிருந்து கறுப்பு அரிசியும் ஏற்றுமதி ஆகியுள்ளது.

கடல் மற்றும் தோட்ட பொருட்கள் அல்லாத விவசாய பொருட்களின் ஏற்றுமதி மட்டும், 28.36 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது.இந்த ஏற்றுமதி வளர்ச்சி போக்கானது, நடப்பு நிதி ஆண்டிலும் தொடர வாய்ப்பிருப்பதாக விவசாய துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இந்திய தயாரிப்புகளுக்கான புதிய சந்தைகளை பெறுவதற்காக, வேளாண்மை துறையுடன் இணைந்து, மத்திய வர்த்தக துறை முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது என்றும் தெரிவித்துள்ளனர்.

மூலக்கதை