டோக்கியோ ஒலிம்பிக்கில் புதுவித விளையாட்டு `ஸ்போர்ட் கிளைம்பிங்`: காரணமதப்பினால் மரணம் போன்ற விளையாட்டில் சாதிக்க வீரர்கள் தீவிரம்

தினகரன்  தினகரன்
டோக்கியோ ஒலிம்பிக்கில் புதுவித விளையாட்டு `ஸ்போர்ட் கிளைம்பிங்`: காரணமதப்பினால் மரணம் போன்ற விளையாட்டில் சாதிக்க வீரர்கள் தீவிரம்

டோக்கியோ: டோக்கியோ ஒலிம்பிக்கில் புதிதாக இடம்பெறும் 4வகையான விளையாட்டுகளில்  ஸ்போர்ட் கிளைம்பிங் எனப்படும் செங்குத்தான பாறையேறும் போட்டியும் இடம் பெற்றுஉள்ளது. ஸ்பைடர் மென் படப்பாணியில் காணப்படும் இந்த விளையாட்டு கரணம் தப்பினால் மரணம் மட்டும்தான், ஆனால் குறிப்பிட்ட வீரர் தனது பிடியில் இருந்து தவறினாலும் உயிருக்கு சேதம் ஏற்படாதவாறு பாதுகாப்பு அம்சங்கள் செய்யப்பட்டுள்ளன. இப்படி ஒருவித்தியாசமான விளையாட்டை ஒலிம்பிக் ரசிகர்கள் எதிர்வரும் ஒலிம்பிக்கில் காணவிருக்கின்றனர். ஜென் ஹோஜர்  எனப்படும் இந்த 29 வயது வீரர் ஜெர்மனி சேர்ந்தவர். இவர் இந்த  ஸ்போர்ட் கிளைம்பிங் போட்டி ஒருநாளாவது ஒலிம்பிக்கில் இடம்பெற வேண்டும் என்பதற்காக தவமிருந்தனர் ஆவார். இந்நிலையில் அவர் கனவை நினைவாக்கும் விதமாக டோக்கியோ ஒலிம்பிக்கில் கராத்தே, ஸ்கட்போடிங், விளையாட்டுகளுடன்  ஸ்போர்ட் கிளைம்பிங் இந்த முறை புதிதாக இடம் பிடித்துள்ளது. அதில் சாதிப்பதற்காக ஜென் ஹோஜர் நாள்தோறும் கடுமையாக உழைத்துவருகிறார். 10வயது முதல் இந்த விளையாட்டில் தன்னை அர்பணித்துக்கொண்ட கோசர் 2018-ல் நடந்த உலக சாம்பியன் போட்டியில் வெண்கல பதக்கம் வென்றார். என்றாலும் ஒலிம்பிக்கில் தனது திறமையை காட்டவேண்டும் என்பதே லட்சியமாக இருந்து வந்தது. இடத்திற்கு டோக்கியோ ஒலிம்பிக் குழு வாய்ப்பை உருவாக்கியுள்ளது. ஆனால் தனது காலத்தில் இந்த  ஸ்போர்ட் கிளைம்பிங் ஒலிம்பிக்கில் இடம் பிடிக்கும் என்பதை தன்னால் நம்பமுடியவில்லை என்று ஆச்சரியம் தெரிவித்துள்ளார். ஸ்போர்ட் கிளைம்பிங் வெற்றியாளர், speed, bouldering, lead, ஆகிய 3 பிரிவிலான போட்டிகளில் அடிப்படையில் தீமானிக்கப்படுகிறார். 15 மீட்டர் சுவரில் கீழ் இருந்து எவ்வளவு வேகமாக இலக்கை எட்டுகிறார் என்பது speed போட்டியாகும். bouldering பிரிவில் சிறிய சுவற்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள வழியாக இலக்கை எட்டுவது, lead என்பது குறிப்பிட்ட நேரத்தில் எந்த அளவுக்கு உயரே இருக்கிறார் என்பது ஆகும். இவ்வாறான 3 போட்டிகளிலும் பெரும் ஒட்டு மொத்த புள்ளிகளின் அடைப்படையில் தங்கம், வெள்ளி, வெண்கல பதக்கத்திற்குரியவர்கள் தீர்மானிக்கப்படுகின்றன. இந்த போட்டிகளில் ஜப்பான், அமெரிக்கா, உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த வீரர்கள் மற்றவர்களுக்கு சவாலாக இருப்பார்கள் என்பதால் ஒலிம்பிக்கில் முதன்முறையாக இடம்பெற்றுள்ள இந்த போட்டி பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

மூலக்கதை