மிகப்பெரிய விசிறியாகிவிட்டேன் - ஜோஜு ஜார்ஜ்

தினமலர்  தினமலர்
மிகப்பெரிய விசிறியாகிவிட்டேன்  ஜோஜு ஜார்ஜ்

தியேட்டரில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட தனுஷ் நடித்த ‛ஜகமே தந்திரம்' படம் நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி., தளத்தில் வரும் 18 ம் தேதி வெளியாகிறது. கார்த்திக் சுப்பராஜ் இயக்கியிருக்கும் இப்படத்தில் பிரபல மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். தமிழில் இவர் நடிக்கும் முதல்படம் இதுவாகும்.

ஜோஜு ஜார்ஜ் கூறுகையில், ‛‛நான் கார்த்திக் சுப்பராஜின் மிகப்பெரிய விசிறி. இப்படத்தில் நடிக்க ஆடிசன் செய்த போது, ஒரு காட்சியை விவரித்து கார்த்திக் சுப்பராஜ் நடிக்க சொன்னார். அரைகுறை தமிழில் நடித்தேன். புன்னகையுடன் ஏற்றார். படத்தில் ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ உடன் நடிப்பது பெருமை,'' என்றார்.

மூலக்கதை