இளம் திறமையாளர்களை வரவேற்கிறேன்

தினமலர்  தினமலர்
இளம் திறமையாளர்களை வரவேற்கிறேன்

தமிழில், ஹாஸ்டல் மலையாளத்தில், மரக்கர் படத்தில் நடித்துள்ள அசோக்செல்வன், ப்ரியா ஆனந்துடன் இணைந்து மாயா என்ற குறும்படத்தில் நடித்துள்ளார். படத்தை சசி இயக்கியுள்ளார். ஒரு திரைக்கதை எழுத்தாளர் தன் கனவுப்படைப்பை எப்படி தீர்மானித்து முடிக்கிறார். அவரது பார்வையாளர்கள் யார் என்பதே மாயா குறும்படத்தின் கதை.

இதுகுறித்து அசோக்செல்வன் கூறுகையில், ‛‛உணர்வு பூர்வமாக இணைய முடிகிற கதைகளிலேயே நடிக்க விரும்புகிறேன். இந்த குறும்படத்தின் கதை மிகவும் பிடித்திருந்தது. இளம் திறமையாளர்களுடன் பணிபுரிவது மகிழ்ச்சி,'' என்றார்.

மூலக்கதை