சோக்சிக்கு ஜாமின் கிடைக்குமா

தினமலர்  தினமலர்
சோக்சிக்கு ஜாமின் கிடைக்குமா

ரோசவ்:டொமினிக்காவில் கைது செய்யப்பட்டுள்ள மெஹுல் சோக்சிக்கு ஜாமின் கிடைக்குமா என்பது நாளை தெரியும்.

கடந்த 2018ல் மும்பையைச் சேர்ந்த வைர வியாபாரி மெஹுல் சோக்சி பஞ்சாப் நேஷனல் வங்கியில் 14 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்து வட அமெரிக்க நாடான ஆன்டிகுவாவுக்கு தப்பிச் சென்றார். அங்கு வசித்து வந்த சோக்சி கடந்த மே 23ல் மாயமானார்.இந்நிலையில் ஆன்டிகுவா அருகே உள் டொமினிக்கா தீவில் போலீசார் சோக்சியை கைது செய்தனர்.

அவர் கியூபாவுக்கு தப்பியோடும் திட்டத்துடன் டொமினிக்காவில் சட்ட விரோதமாக நுழைந்ததாக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.இதையடுத்து சோக்சி சார்பில் அவரது வழக்கறிஞர்கள் டொமினிக்கா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஜாமின் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நிராகரிக்கப்பட்டதை அடுத்து உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நேற்று டொமினிக்கா உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது 'ஜாமின் வழங்கினால் சோக்சி தப்பியோடி விடுவார்' என அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.அதை சோக்சி வழக்கறிஞர் மறுத்தார். இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி விசாரணையை 11ம் தேதிக்கு ஒத்தி வைத்தார். அதன்படி நாளை சோக்சிக்கு ஜாமின் கிடைக்குமா இல்லையா என்பது தெரியவரும்.

மூலக்கதை