தென்னாப்பிரிக்க பெண்ணிற்கு ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகள்

தினமலர்  தினமலர்
தென்னாப்பிரிக்க பெண்ணிற்கு ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகள்

ஜோகன்னஸ்பர்க்:தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த 37 வயது பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகள் பிறந்துள்ளன. இது புதிய உலக சாதனையாக கருதப்படுகிறது.

தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த கோசியாமே தமாரா சிதோல் என்ற பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகள் பிறந்துள்ளன. இதில் ஏழு ஆண், மூன்று பெண் குழந்தைகள். இவருக்கு ஏற்கனவே ஒரே பிரசவத்தில் இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளன.கர்ப்ப காலத்தில் அவருக்கு 'ஆறு குழந்தைகள் பிறக்கும்' என டாக்டர்கள் தெரிவித்தனர். தாயும் 10 குழந்தைகளும் நலமாக இருப்பதாக டாக்டர்கள் கூறியுள்ளனர்.

அடுத்த சில வாரங்கள் குழந்தைகள் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருக்கும்.இது புதிய உலக சாதனையாக கருதப்படுகிறது. இதற்கு முன் மாலியைச் சேர்ந்த ஹாலிமா சிசி என்ற பெண்ணுக்கு கடந்த மாதம் ஒன்பது குழந்தைகள் பிறந்ததே சாதனையாக இருந்தது.அதற்கு முன் அமெரிக்காவைச் சேர்ந்த பெண்ணுக்கு 2009ல் ஒரே பிரசவத்தில் எட்டு குழந்தைகள் பிறந்து உள்ளன.

மூலக்கதை