கோவிட் முன்கள பணியில் ரோபோ: ஹாங்காங் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

தினமலர்  தினமலர்
கோவிட் முன்கள பணியில் ரோபோ: ஹாங்காங் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

ஹாங்காங்: கோவிட் நோயாளிகளைக் கவனிப்பதற்காக புதிய வகை ரோபோவை ஹாங்காங் விஞ்ஞானிகள் கண்டுபிடித்து அசத்தியுள்ளனர்.


ஹாங்காங் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ள இந்த ரோபோவுக்கு அவர்கள் 'கிரேஸ்' எனப் பெயர் சூட்டியுள்ளனர். செவிலியரைப் போல நீல நிற உடை இந்த ரோபோவுக்கு அணிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் இந்த ரோபோவுக்கு ஆசிய பிராந்திய அம்சங்கள் புரோகிராம் செய்யப்பட்டுள்ளன. இந்த ரோபோ தனது மார்புப் பகுதியில் உள்ள கருவிகள் மூலம் மனிதர்களின் உடல் வெப்பத்தை பரிசோதிப்பதோடு, செயற்கை நுண்ணறிவுத் திறன் (ஏஐ) மூலம் நோயாளிகளின் பிரச்னைகளை எளிதில் கண்டறிகிறது.


குறிப்பாக, முதியவர்கள், கோவிட் தொற்றால் தனிமைப்படுத்தப் பட்டவர்களுடன் தொடர்பு கொள்ளும் வகையில் இந்த ரோபோ உருவாக்கப்பட்டு உள்ளது. இதன்மூலம் முன்களப் பணியாளர்களின் பணிச்சுமையைக் குறைக்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கண்டுபிடிப்பை பல்வேறு நாட்டு விஞ்ஞானிகளும் பாராட்டி வருகின்றனர்.

மூலக்கதை