நிறவெறி சர்ச்சையில் சிக்கியுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் மோர்கன் மற்றும் பட்லர்

தினகரன்  தினகரன்
நிறவெறி சர்ச்சையில் சிக்கியுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் மோர்கன் மற்றும் பட்லர்

லண்டன்: நிறவெறியை தூண்டும் வகையில் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஆலி ராபின்சனை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இடைநீக்கம் செய்திருந்த நிலையில் அந்த அணியின் கேப்டன் மோர்கன் மற்றும் பட்லர் மீதும் நிறவெறி புகார்கள் எழுந்துள்ளன. நியூசிலாந்துக்கு எதிரான சமீபத்திய போட்டியில் அறிமுகமான ராபின்சன் தனது வளர் இளம் பருவத்தில் 2013ஆம் ஆண்டு காலகட்டத்தில் பதிவிட்ட நிறவெறி தொடர்பான டுவிட்களுக்காக இடைநீக்கம் செய்யப்பட்டார்.\r இதற்கு அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் உள்ளிட்ட முக்கிய தலைவர்களும் கலவையான விமர்சனங்களை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் மீது வைத்தனர். இந்நிலையில் இங்கிலாந்து உலகக்கோப்பையை வசப்படுத்திய கேப்டன் மோர்கன் மற்றும் துணை கேப்டன் 2018ஆம் ஆண்டு இட்ட பதிவுகள் நிறவெறியை தூண்டும் வகையில் உள்ளதாக புகார்கள் முன்வைக்கப்பட்டன.\r ஆசிய மக்கள் பேசும் ஆங்கில நடையை கேலி செய்யும் விதமாகவும் இழிவுபடுத்தும் விதமாகவும் அவர்கள் இருவரும் உரையாடியதை பலர் மேற்கோளிட்டு புகார் எழுப்பினர். இதுகுறித்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இருவரிடமும் விசாரணையை தொடங்கியுள்ளது.

மூலக்கதை