2020-21-ம் ஆண்டு நடைபெற்ற இந்தியா-ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டி சிறந்த டெஸ்ட் தொடராக தேர்வு: ஐசிசி அறிவிப்பு

தினகரன்  தினகரன்
202021ம் ஆண்டு நடைபெற்ற இந்தியாஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டி சிறந்த டெஸ்ட் தொடராக தேர்வு: ஐசிசி அறிவிப்பு

துபாய்: உலகின் சிறந்த டெஸ்ட் தொடராக இந்தியா-ஆஸ்திரேலியா போட்டியை ஐசிசி தேர்வு செய்துள்ளது. இதுவரை நடந்துள்ள டெஸ்ட் கிரிக்கெட் தொடர்களிலேயே உச்சக்கட்டமாக மிகச்சிறந்த டெஸ்ட் தொடர் எது என்பது பற்றி அறிய சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சமூக வலைதளம் மூலம் ரசிகர்களிடம் வாக்கெடுப்பு நடத்தியது. இதையொட்டி 144 ஆண்டு கால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் பரபரப்பாகவும், திரில்லிங்காகவும் அமைந்த 16 தொடர்களை அடையாளம் கண்டு வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. இதில் 1882-ம் ஆண்டு, 1932-ம் ஆண்டுகளில் நடந்த போட்டிகளும் இடம் பிடித்தன. இவற்றில் இருந்து இந்தியா-ஆஸ்திரேலியா 2001-ம் ஆண்டு தொடர், இந்தியா-ஆஸ்திரேலியா 2020-21-ம் ஆண்டு தொடர், இந்தியா-பாகிஸ்தான் 1999-ம் ஆண்டு தொடர், ஆஸ்திரேலியா-இங்கிலாந்து 2005-ம்ஆண்டு ஆஷஸ் தொடர் ஆகியவை அரைஇறுதிக்கு முன்னேறின. இதில் இருந்து நீயா-நானா இறுதிசுற்றில் இந்தியா-ஆஸ்திரேலியா (2020-21), இந்தியா-பாகிஸ்தான் (1999) தொடர்கள் மல்லுகட்டின. இந்நிலையில் 2020-21-ம் ஆண்டில் நடந்த முடிந்த பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான இந்தியா-ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் சிறந்த தொடருக்கான அங்கீகாரத்தை தட்டிச் சென்றது.

மூலக்கதை