பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: அரையிறுதியில் ஸிடான்செக்: பிளிஸ்கோ சகோதரிகள் ஏமாற்றம்

தினகரன்  தினகரன்
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: அரையிறுதியில் ஸிடான்செக்: பிளிஸ்கோ சகோதரிகள் ஏமாற்றம்

பாரிஸ்:  பிரெஞ்ச் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டியின்  அரையிறுதி போட்டிக்கு முதல் வீராங்கனையாக  ஸிடான்செக் முன்னேறினார். பாரிசில் நேற்று நடந்த மகளிர் ஒற்றையர் பிரிவு  முதல் காலிறுதிப் போட்டியில்  ஸ்லோவேனியா வீராங்கனை  தமரா ஸிடான்செக்(85வது ரேங்க்),  ஸ்பெயின் வீராங்கனை  பவுலா படோசா(35வது ரேங்க்) ஆகியோர் மோதினர்.  முதல் செட்டை ஸிடான்செக்  7-5 என்ற புள்ளி கணக்கிலும், 2வது செட்டை பவுலா 6-4 என்ற கணக்கிலும் வென்றனர். அதனால் அதிகம் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய 3வது செட்டில் இருவரும் வேகம் காட்ட, அது  டை பிரேக்கர் வரை நீண்டது. சுமார் ஒரு மணி நேரம் நீண்ட 3வது செட்டை 8-6 என்ற கணக்கில் ஸிடான்செக் கைப்பற்றினார். மொத்தத்தில்   2 மணி 26 நிமிடங்கள் நடந்த ஆட்டத்தை 2-1 என்ற செட்களில் வென்ற ஸிடான்செக் முதல் வீராங்கனையாக அரையிறுதிக்கு தகுதிப்பெற்றார்.மகளிர் இரட்டையர் பிரிவு  முதல் காலிறுதியில்  செக் குடியரசை சேர்ந்த சகோதரிகள் கரோலினா பிளிஸ்கோவா(10வது ரேஙக்), கிறிஸ்டியனா பிளிஸ்கோவா(89வது ரேங்க்) இணையுடன்,  அதே நாட்டைச்சேர்ந்த  பார்போரா கிரெஜ்சிகோவா(33வது ரேங்க்), காத்ரினா சினியகோவா(68வது ரேங்க்) இணை மோதியது.  அதில் பர்போரா, சினியகோவா இணை  ஒரு மணி 16நிமிடங்களில் 6-4, 6-4 என நேர் செட்களில் வென்று அரையிறுதிக்கு முன்னேறியது. பார்போரா  ஒற்றையர் காலிறுதியிலும்  இன்று விளையாடுகிறார். ஏற்கனவே ஒற்றையர் பிரிவில் தோற்று வெளியேறிய கரோலினா சகோதரிகள் இரட்டையர் பிரிவிலும் ஏமாற்றத்துடன் வெளியேறினர்.

மூலக்கதை