ஸ்பெயின் கால்பந்து அணி கேப்டனுக்கு கொரோனா

தினகரன்  தினகரன்
ஸ்பெயின் கால்பந்து அணி கேப்டனுக்கு கொரோனா

மாட்ரிட்: ஜெர்மனி, ஸ்பெயின், போர்ச்சுகல், பிரான்ஸ் உள்பட 24 அணிகள் பங்கேற்கும் 16-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் (யூரோ) போட்டி வருகிற 11-ந் தேதி முதல்  வரும் ஜூலை 11-ந் தேதி வரை 11 நாடுகளில் நடக்கிறது. இந்த நிலையில் யூரோ போட்டிக்கான ஸ்பெயின் கால்பந்து அணியின் கேப்டன் செர்ஜியோ பஸ்கெட்ஸ் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது பரிசோதனையில் தெரியவந்துள்ளது. இதனை அடுத்து தனிமைப்படுத்தப்பட்டு இருக்கும் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அணியின் மற்ற வீரர்கள் யாருக்கும் கொரோ னா பாதிப்பு ஏற்படவில்லை.இருப்பினும் அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் முன்னெச்சரிக்கையாக தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று ஸ்பெயின் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஸ்பெயின் அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் வருகிற 14-ந் தேதி சுவீடனை சந்திக்கிறது. இந்த ஆட்டத்தில் செர்ஜியோ பஸ்கெட்ஸ் ஆடுவது சந்தேகம் தான்.

மூலக்கதை