ராபின்சன் நீக்கம்: அஸ்வின் வருத்தம்

தினகரன்  தினகரன்
ராபின்சன் நீக்கம்: அஸ்வின் வருத்தம்

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்தின் வேகப்பந்துவீச்சாளர் ஓலி ஜான்சன் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இது அவருக்கு முதல் சர்வதேசப் போட்டி. ஆனால் இரு அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. இந்தப் போட்டியில் சிறப்பாக பந்து வீசிய ராபின்சனுக்கு பாராட்டு கிடைத்தாலும், அவர் சர்ச்சையிலும் சிக்கினார். அதாவது அவர் 8 வருடங்களுக்கு முன்பு சில டுவிட்களை வெளியிட்டிருந்தார்.  அதில் இனவெறியைத் தூண்டும் விதமாகவும், பாலியல் ரீதியாக சில வார்த்தைகளையும் பதிவு செய்திருந்தார். இதற்கு ராபின்சன் விளக்கமளித்தபோதும் அதனை ஏற்க மறுத்த இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அவருக்கு இடைக்கால தடை விதித்தது.இதுதொடர்பாக இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வின் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் ”சில ஆண்டுகளுக்கு முன்பு எதிர்மறையான பதிவுகளை அவர் தெரிவித்ததற்காக இப்போது தண்டனை கிடைத்திருக்கிறது. அவர் கிரிக்கெட் விளையாட தடை செய்யப்பட்டு இருக்கிறார். நான் உண்மையாகவே ராபின்சனுக்காக வருத்தப்படுகிறேன். ஒரு அறிமுக வீரராக டெஸ்ட்டில் அடிவைத்து சிறப்பான தொடக்கத்தை தந்தார். இந்தத் தடையின் மூலம் எதிர்காலம் சமூக வலைத்தளங்களின் கைகளில் இருக்கிறது என தெரிகிறது” என பதிவிட்டுள்ளார்.

மூலக்கதை