டிவிஎஸ் அசத்தல்.. விற்பனையில் புதிய சாதனை..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
டிவிஎஸ் அசத்தல்.. விற்பனையில் புதிய சாதனை..!

தமிழ்நாட்டின் முன்னணி இருசக்கர வாகன விற்பனை நிறுவனமான டிவிஎஸ் இந்திய வர்த்தகத்தைத் தாண்டி வெளிநாட்டிலும் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யத் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் வாயிலாக வெளிநாடு வர்த்தகத்தில் டிவிஎஸ் முதல் முறையாக விற்பனையில் புதிய மைல்கல்லை அடைந்துள்ளது. கொரோனா தொற்றால் இந்தியச் சந்தை வர்த்தகம் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில், வெளிநாட்டின் அதிகளவிலான வர்த்தகத்தைப் பெற்றுள்ளது டிவிஎஸ் நிறுவன முதலீட்டாளர்களுக்கு இந்நிறுவனத்தின் மீதான நம்பிக்கையை அதிகரித்துள்ளது.

மூலக்கதை