'நேஷனல் ஹெரால்டு' வழக்கு; ஜூலை 30ல் இறுதி விசாரணை

தினமலர்  தினமலர்
நேஷனல் ஹெரால்டு வழக்கு; ஜூலை 30ல் இறுதி விசாரணை

புதுடில்லி : 'நேஷனல் ஹெரால்டு' பத்திரிகை மோசடி தொடர்பான வழக்கில், 'ஜூலை 30ல் இறுதி விசாரணை நடக்கும்' என டில்லி உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை, காங்கிரஸ் தலைவர் சோனியா, அவரது மகன் ராகுல் உள்ளிட்டோர் இயக்குனர்களாக உள்ள 'யங் இந்தியா' என்ற நிறுவனம் விலைக்கு வாங்கியது. இதில் மோசடி நடந்துள்ளதாக பா.ஜ., மூத்த தலைவரும், எம்.பி.,யுமான சுப்பிரமணியன் சுவாமி வழக்கு தொடர்ந்துள்ளார்.


டில்லி நீதிமன்றத்தில் நடந்து வரும் இந்த வழக்கில் சோனியா, ராகுல் உள்ளிட்டோர் மீது வழக்கு தொடரவும், சாட்சியங்களை முன்வைக்க அனுமதிக்கும்படியும், டில்லி உயர் நீதிமன்றத்தில் சுப்பிரமணியன் சுவாமி மனு தாக்கல் செய்திருந்தார்.

இது குறித்து பதிலளிக்கும்படி சோனியா, ராகுல் உள்ளிட்டோருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதுவரை, கீழ் நீதிமன்ற விசாரணைக்கும் தடை விதித்திருந்தது. தற்போது, அனைத்து தரப்பும் பதில் மனு தாக்கல் செய்துள்ளனர்.இதையடுத்து 'வரும் ஜூலை 30ம் தேதி இறுதி விசாரணை நடக்கும்' என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மூலக்கதை