லிவ் - இன் உறவு ஏற்புடையது அல்ல: பஞ்சாப் உயர்நீதிமன்றம்

தினமலர்  தினமலர்
லிவ்  இன் உறவு ஏற்புடையது அல்ல: பஞ்சாப் உயர்நீதிமன்றம்

சண்டிகர் :'திருமணம் செய்து கொள்ளாமல் ஆணும் -பெண்ணும் சேர்ந்து வாழும், 'லிவ் - இன் ரிலேஷன்ஷிப்' எனும் உறவு, ஒழுக்க ரீதியாகவும், சமூக ரீதியாகவும் ஏற்புடையது அல்ல' என, பஞ்சாப் - ஹரியானா உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த குல்ஸா குமாரி, 19; குர்விந்தர் சிங், 22, ஆகியோர் காதலித்து வருகின்றனர். இதற்கு பெண் வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.இதையடுத்து வீட்டை விட்டு வெளியேறிய குல்ஸா குமாரி, காதலன் குர்விந்தருடன் சேர்ந்து வாழ்கிறார்.

இம்மனுவை விசாரித்த நீதிபதி, 'திருமணம் செய்து கொள்ளாமல் ஆணும் - பெண்ணும் ஒன்றாக சேர்ந்து வாழும் உறவு, ஒழுக்க ரீதியாகவும், சமூக ரீதியாகவும் ஏற்புடையது அல்ல' என உத்தரவிட்டு, மனுவை தள்ளுபடி செய்தார்.

மூலக்கதை