வாழ்த்து சொல்ல வந்தாங்களாம்! அமைச்சர் மகேஷ் மழுப்பல்

தினமலர்  தினமலர்
வாழ்த்து சொல்ல வந்தாங்களாம்! அமைச்சர் மகேஷ் மழுப்பல்

திருச்சி ;'கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள், தனக்கு வாழ்த்து தெரிவிக்கவே கட்சி அலுவலகத்திற்கு வந்தனர்' என பள்ளிக்கல்வி துறை அமைச்சர் மகேஷ்
தெரிவித்துள்ளார்.

அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:நான் அமைச்சரானதற்கு வாழ்த்து சொல்ல, கலெக்டர், கமிஷனர்கள் என் கட்சி அலுவலகத்துக்கு வந்தனர். அதிர்ச்சிஅப்போது, கொரோனா தடுப்பு தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடந்து கொண்டிருந்ததால், அவர்களும் பங்கேற்று சில கருத்துகளை பகிர்ந்து கொண்டனர்.

அரசு ஊழியர் என்ற முறையில், என் அலுவலகத்தில் கூட்டம் நடத்த அனுமதி இல்லை என்பதை அறிவேன். செய்திகளில் வந்தது போல், இது முன்னரே உத்தேசிக்கப்பட்ட கூட்டம் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

ஆலோசனைக் கூட்டத்துக்கு அழைத்து விட்டு, தனக்கு பிரச்னை என்றதும், அதிகாரிகளை பலிகடா ஆக்கும் வகையில் அறிக்கை விட்டுள்ள அமைச்சரின் செயலால், கூட்டத்தில் பங்கேற்ற அதிகாரிகள் தரப்புகடும் அதிர்ச்சி அடைந்து உள்ளது.

பதவி நீக்கம்


இதற்கிடையில், திருச்சி அ.தி.மு.க., முன்னாள் எம்.பி., குமார், கவர்னருக்கு அனுப்பியுள்ள புகாரில், 'கட்சி அலுவலகத்தில் கூட்டம் நடத்தி, கலெக்டர், போலீஸ் கமிஷனர், மாநகராட்சி கமிஷனரை பங்கேற்க வைத்தது, இந்திய இறையாண்மைக்கு எதிரானது. 'எனவே, பள்ளிக்கல்வி அமைச்சரை பதவி நீக்க வேண்டும்' என கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை