ஓடிடி-யை குறி வைக்கும் சுசீந்திரன் – ஜெய் கூட்டணியின் 2 படங்கள்

FILMI STREET  FILMI STREET
ஓடிடியை குறி வைக்கும் சுசீந்திரன் – ஜெய் கூட்டணியின் 2 படங்கள்

சிம்பு நடிப்பில் உருவான ‘ஈஸ்வரன்’ படத்தை சுசீந்திரன் இயக்கியிருந்தார்.

இந்த படம் 2021 பொங்கலுக்கு தியேட்டர்களில் ரிலீசானது.

இதற்கு முன்பே ஜெய் நடித்த ‘குற்றமே குற்றம்’ என்ற படத்தை இயக்கியிருந்தார் சுசீந்திரன்.

திவ்யா என்பவர் நாயகியாக நடிக்க ஹரிஷ் உத்தமன், ஸ்மிருதி வெங்கட், காளி வெங்கட் ஆகியோரும் நடித்துள்ளனர்.

இப்படத்தை ஆக்சிஸ் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரித்துள்ளது.

தற்போது நேரடியாக ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியிடவுள்ளனர். விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது.

இவர்களின் கூட்டணியில் உருவான மற்றொரு படமான ‘சிவா சிவா’ என்ற படமும் ஓடிடி தளத்தில் வெளியாகும் என கூறப்படுகிறது.

இந்த படத்தின் நாயகன் ஜெய் இதில் இசை அமைப்பாளராகவும் அறிமுகமாகிறார். சுசீந்திரன் இயக்கியுள்ளார்.

Suseenthiran and Jai films to release in OTT

மூலக்கதை