காலை 10 மணிக்கு மேல் வெளியே செல்ல இ-பதிவு அவசியம்..; காவல்துறை கெடுபிடி

FILMI STREET  FILMI STREET
காலை 10 மணிக்கு மேல் வெளியே செல்ல இபதிவு அவசியம்..; காவல்துறை கெடுபிடி

கொரோனா ஊரடங்கு 10 நாட்களாக அமலில் இருந்தாலும் அதனை மீறுபவர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர்.

இன்று மே.18 முதல் முறையான ஊரடங்கு பணிகளை தீவிரப்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு…

“கரோனா தொற்று பரவலைத் தடுக்கும் பொருட்டு தமிழக அரசு அறிவித்துள்ள முழு ஊரடங்கு தீவிரப்படுத்த மே.18 (இன்று) முதல் காவல்துறை நடவடிக்கைகள் மற்றும் பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டியவை குறித்து சென்னை பெருநகர காவல்துறை அறிவிப்பு. காலை 10.00 மணி முதல் பொதுமக்கள் சரக எல்லைக்கு வெளியே செல்ல இ-பதிவு அவசியம்.

கீழ்கண்ட கட்டுபாடுகள் இன்று முதல் அமல்…

* அரசால் அனுமதிக்கப்பட்ட (காலை 06.00 மணி முதல் காலை 10.00 மணி வரை) நேரத்தை மீறி வெளியே வருபவர்கள் உரிய இ-விண்ணப்பம் பதிவு செய்து அனுமதி பதிவு பெற்றிருக்க வேண்டும்.

*இ-பதிவு செய்யாமல் வெளியே வருபவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என அறிவுறுத்தப்படுகிறது.

அவசர மருத்துவ சிகிச்சை, மற்றும் தவிர்க்க முடியாத தேவைகளை தவிர வேறெந்த நடவடிக்கைகளுக்கும் இ-பதிவு இல்லாமல் பொதுமக்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள்.

*பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும்.

முகக்கவசம் அணியாமல் செல்பவர்கள் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்காதவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

அத்தியாவசியப் பணிகளான திருமணம், முக்கிய உறவினரின் இறப்பு, மருத்துவ சிகிச்சை மற்றும் முதியோர்களுக்கான தேவை போன்ற அனைத்திற்கும் மாவட்டங்களுக்குள்ளும் மற்றும் மாவட்டங்களுக்கிடையேயும் பயணம் மேற்கொள்ள இ-பதிவுமுறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய பணிகளுக்காக வாகனங்களில் செல்வோர், eregister.tnega.org என்ற இணைய பக்கத்தில், ஆவணங்களுடன் பதிவு செய்து, அதற்கான ஆதாரத்தை வைத்துக் கொண்டால் போதுமானது.

People need to e register to travel within districts

மூலக்கதை