ஜடேஜா போல் `ஆக்‌ஷன்’ காட்டிய தோனி...!

தினகரன்  தினகரன்
ஜடேஜா போல் `ஆக்‌ஷன்’ காட்டிய தோனி...!

டெல்லி: ஜடேஜா பேட்டிங்கில் நல்ல ஸ்கோர் எடுத்து சாதிக்கும்போது மட்டையை வாள் போல் சுழற்றி மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார். இது அவரது மேனரிசம். உண்மையில் 2011 உலகக்கோப்பை இறுதிப் போட்டியை சிக்சர் அடித்து வென்ற தோனி அப்படித்தான் வாள் போல் மட்டையைச் சுழற்றினார். ஆனாலும் இது ஜடேஜா ஸ்டைல் என்றே அழைக்கப்பட்டு வருகிறது. 14வது ஐபிஎல் தொடர் கொரோனா காரணமாக ரத்து ஆனதையடுத்து வீரர்கள் பலரும் சமூக ஊடகங்களில் பொழுதைக் கழிக்கின்றனர். சில வீரர்கள் கொரோனா நிவாரணத்துக்கு நிதி திரட்டுவது, ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்குவது, கொரோனா பாதித்தவர்களுக்கு உணவு உள்ளிட்ட உதவிகள் புரிவது என்று தங்களை சமூக சேவையில் ஈடுபடுத்தி வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டது. அதில் ‘தல’ தோனி, தன் அணியின் சகவீரர் ஜடேஜா மட்டையை வாள் போல் எப்படி சுழற்றுவார் என்பதை மட்டை இல்லாமல் தன் வெறுங்கையை அதேபோல் வாள் சுழற்றுவது போல் சுழற்றி  இமிடேட் செய்து காட்டினார். சமூக ஊடகமான இன்ஸ்டாகிராமில் மிமிக்ரி வீடியோ வைரலாகி வருகிறது.

மூலக்கதை