கோழி மூளை சாப்பிட்டால் நீண்ட ஆயுள் கிடைக்குமாம்

தினமலர்  தினமலர்
கோழி மூளை சாப்பிட்டால் நீண்ட ஆயுள் கிடைக்குமாம்

கான்பெர்ரா: ஆஸ்திரேலியாவில், 111 வயது கடந்த ஒருவர், 'கோழி மூளையைச் சாப்பிடுவதால் தான், நான் நீண்ட காலம் வாழ்கிறேன்' என கூறி, ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளார். ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணம் ரோமா நகரில் வசிப்பவர் டெக்ஸ்டர் க்ரூகர். கால்நடை வளர்க்கும் தொழில் செய்த இவரது வயது, நேற்றைய நிலவரப்படி, 111 ஆண்டுகள் மற்றும், 124 நாட்கள்.

இத்தனை காலம் தான் வாழ காரணம், கோழி மூளை சாப்பிடுவது தான் என்றார் இவர்.

அவர் கூறும்போது, ''கோழியின் தலையில், ஒரு சிறிய மூளை இருக்கும். தொடர்ந்து அதை சமைத்து சாப்பிட்டால் நீண்ட ஆயுளுடன் வாழலாம்,'' என்றார்.அவரது மகன் கிரெக், 74, தந்தையின் வழியை பின்பற்றியதால் தான், இத்தனை ஆண்டுகள் தான் வாழ்வதாக குறிப்பிட்டு
உள்ளார். ''ஆஸ்திரேலிய நாட்டில் தற்போது வசிப்பவர்களிலேயே, மிக வயதானவர் டெக்ஸ்டர் க்ரூகர் தான்,'' என, 'ஆஸ்திரேலியன் புக் ஆப் ரெகார்ட்ஸ்' நிறுவனர் ஜான் டெய்லர் கூறியுள்ளார்.

மூலக்கதை