கோவிட் நோயாளிகளுக்கு தன்னம்பிக்கையூட்டும் இந்துஜா குழுமம்

தினமலர்  தினமலர்
கோவிட் நோயாளிகளுக்கு தன்னம்பிக்கையூட்டும் இந்துஜா குழுமம்

ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக பல்வேறு தரப்பினருக்கும் உதவிக்கரம் நீட்டி வரும் இந்துஜா குழுமத்தின் இந்துஜா அறக்கட்டளை, தற்போதைய கோவிட்19 காலகட்டத்தில் மக்களுக்கு தன்னம்பிக்கை கொடுக்கும் வகையில் மனநலம் மற்றும் நல்வாழ்வுத் துறையில் கால்பதித்துள்ளது. இதற்காக இந்துஜா அறக்கட்டளையானது சோப்ரா அறக்கட்டளை, தி ஜான் டபிள்யூ பிரிக் மனநல அறக்கட்டளை மற்றும் சி.ஜி. கிரியேட்டிவ்ஸ் ஆகியவற்றுடன் இணைந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து இந்துஜா மற்றும் சோப்ரா, தி ஜான் உள்ளிட்ட அமைப்புகள் இணைந்து நெவர் அலோன் என்ற பெயரில் சர்வதேச அளவிலான ஸ்பாட்லைட் இந்தியா (மெய்நிகர்) உச்சிமாநாட்டினை நடத்த உள்ளன. இதற்காக இந்துஜா அறக்கட்டளை இணை நிதியுதவி செய்துள்ளது.
ஸ்பாட்லைட் இந்தியாவில் சத்குரு, மற்றும் அபெய் தியோல் உள்ளிட்ட பல நட்சத்திர பேச்சாளர்கள் பங்கேற்று கரோனா நோயாளிகள் மற்றும் பொதுமக்களுக்கு தன்னம்பிக்கையூட்டுவார்கள். இந்த மெய்நிகர் உச்சி மாநாடு வருகிற 21ம் தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 6.30 மணிக்கு பேஸ்புக், யூடியூப் மற்றும் பிற ஊடக தளங்களில் நேரடியாக ஒளிபரப்பப்படும். இதில் பங்கேற்க விரும்புவோர் இலவசமாக <https://neveralonesummit.live/> என்ற முகவரியில் இணைந்து தங்கள் மன ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்திக்கொள்ளலாம்.

இந்த மெய்நிகர் உச்சி மாநாட்டில் முன்னணி மனநல வல்லுநர்கள், ஆரோக்கிய வல்லுநர்கள், மூளை விஞ்ஞானிகள், கலைஞர்கள் மற்றும் இசைக்கலைஞர்கள் பங்கேற்று உலகளாவிய பார்வையாளர்களுக்கு மன மற்றும் உணர்ச்சி ரீதியான பின்னடைவை சரிசெய்வதற்கான மனநல உத்திகள், தீர்வுகள் மற்றும் யோசனைகளைப் பகிர்ந்து கொள்வார்கள். இந்த இக்கட்டான சூழலில் சக மனிதனுக்கு தன்னம்பிக்கை, உத்வேகம் மற்றும் சமூக உணர்வை வழங்க நாங்கள் விரும்புகிறோம்.

ஆன்மீகம் சார்ந்த ஆலோசனையானது மனிதனின் சுயமரியாதையையும் நம்பிக்கையையும் மீண்டும் பெறுவதற்கு உதவும் மற்றும் ஒருவர் ஒருபோதும் தனியாக இல்லை என்பதை உணர முடியும். இந்த உச்சிமாநாடு அத்தகைய உயர்ந்த சாத்தியங்களின் முழு ஒருங்கிணைப்பையும் முன்வைக்கிறது” என்று இந்துஜா குழுமத்தின் இணைத் தலைவரும், இந்துஜா அறக்கட்டளையின் அறங்காவலருமான கோபிசந்த் பி. இந்துஜா தெரிவித்துள்ளார்.

இந்த முயற்சி குறித்து இந்துஜா அறக்கட்டளையின் தலைவர் பால் ஆபிரகாம் கூறுகையில், “மனித வரலாற்றில் மிகவும் கடினமான காலங்களில் ஒன்றில் நாம் பயணிக்கிறோம். இது போன்ற ஒரு நெருக்கடியில் நமது மன மற்றும் உணர்ச்சி நல்வாழ்வில் கவனம் செலுத்துவதற்கு முற்றிலும் இடமளிக்காமல் நமது உடல் ஆரோக்கியம் முன்னுரிமை பெறுகிறது. நெவர் அலோன் உச்சிமாநாடு 2021இன் ஒரு பகுதியாக ‘ஸ்பாட்லைட் இந்தியா’வை ஏற்பாடு செய்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், என்றார்.

மூலக்கதை