காசா முனை மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல்: 7-வது நாளாக இன்றும் தாக்குதல் நீடிப்பு

தினகரன்  தினகரன்
காசா முனை மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல்: 7வது நாளாக இன்றும் தாக்குதல் நீடிப்பு

வாஷிங்டன்: காசா முனை மீது இஸ்ரேல் நடத்தி வரும் வான் தாக்குதல்களில் ஏராளமான கட்டிடங்கள் தரைமட்டமாகி உள்ளன. அப்பாவி மக்கள் பலர் உயிரிழந்துள்ளனர். இதேபோல் காசா முனையில் இருந்து ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் நகரங்களை குறிவைத்து ஏவுகணை தாக்குதல்களை நடத்துகின்றனர். 7-வது நாளாக இன்றும் தாக்குதல் நீடிக்கிறது. இது ஒரு புறமிருக்க இஸ்ரேலுக்கு எதிராக பாலஸ்தீன ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கும் இஸ்ரேல் படையினருக்கும் இடையே மோதல் ஏற்படுகிறது. இந்த விவகாரம் அமெரிக்க நகரங்களிலும் எதிரொலித்தது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ், நியூயார்க், போஸ்டன், பிலடெல்பியா உள்ளிட்ட சில நகரங்களில் பாலஸ்தீன ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இஸ்ரேல் தூதரக அலுவலகங்கள் அமைந்துள்ள பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பேரணிகளால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள், காசா முனை மீதான தாக்குதலை இஸ்ரேல் நிறுத்த வேண்டும் என்று முழக்கங்கள் எழுப்பினர். சுதந்திர பாலஸ்தீன் முழக்கத்தையும் எழுப்பினர்.

மூலக்கதை