இஸ்ரேல் தாக்குதல்; வன்முறையைக் கைவிட ஜோ பைடன் வலியுறுத்தல்

தினமலர்  தினமலர்
இஸ்ரேல் தாக்குதல்; வன்முறையைக் கைவிட ஜோ பைடன் வலியுறுத்தல்

டெல் அவிவ்: இஸ்ரேலில் கடந்த சில நாட்களாக வன்முறை அதிகரித்து வருகிறது. பாலஸ்தீனத்துக்கும் இஸ்ரேலுக்கும் இடையே உள்ள காஸா பகுதியில் பயங்கரவாதத் தாக்குதல் நடைபெற்ற நிலையில் இரு நாடுகளும் தொடர்ந்து மோதல் போக்கில் ஈடுபட்டு வருகின்றன.

இஸ்ரேலில் உள்ள யூதர்களுக்கும் பாலஸ்தீன மக்களுக்கும் பல ஆண்டுகாலமாக எல்லைப் பிரச்னை நீடித்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக தற்போது பொது இடங்கள் மற்றும் கட்டடங்களில் பிரிவினைவாதிகள் குண்டு வெடிப்பு சம்பவங்களை நிகழ்த்தி வருகின்றனர். இதில் ஐநா தலையிட்டு சுமூகத் தீர்வு கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கை தற்போது வலுத்து வருகிறது.

இந்நிலையில் வன்முறை போராட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க பல நாடுகள் வலியுறுத்தி வந்தன. இதனை தொடர்ந்து தற்போது அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேல், பாலஸ்தீனம் ஆகிய இரு நாடுகளுக்கும் உள்ள மோதல் குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் பாலஸ்தீன பிரதமர் மம்மூத் அப்பாஸ் ஆகியோருடன் தனித்தனியாக தொலைபேசி வாயிலாக உரையாடியுள்ளார். இரு நாடுகளும் தங்களுக்குள் உள்ள கருத்து வேறுபாடுகளை களைந்து வன்முறையை கைவிட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

மூலக்கதை