இது உங்கள் இடம்: சம்பளமின்றி மக்கள் பணி!

தினமலர்  தினமலர்
இது உங்கள் இடம்: சம்பளமின்றி மக்கள் பணி!

உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் :

அரிசி ஸ்ரீராம், சாத்துார், விருதுநகர் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:

'அதிகாரத்தை அனுபவிப்பதற்காக ஆட்சிக்கு வரவில்லை. மக்களுக்கு சேவை செய்வதற்காகவே அரசியலுக்கு வந்திருக்கிறோம்' என, அனைத்து அரசியல்வாதிகளும் கூறுவர்.கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு, மாநிலத்தின் பொருளாதாரம் மீண்டெழுவதற்கு சிரமமாக உள்ளது. இந்தப் பேரிடரை எதிர்கொள்வதற்கு, கூடுதலான நிதி ஆதாரங்களைச் செலவிட வேண்டிய தேவையும் உள்ளது.எனவே, முதல்வர் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நன்கொடை வழங்கிட வேண்டும் என, முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்

.'கொரோனா தடுப்பு பணிகளுக்காக, தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், ஒரு மாத ஊதியத்தை வழங்குவர்' என, முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஆளுங்கட்சி மற்றும் அதன் கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.,க்கள், 159 பேர் உள்ளனர். ஒரு எம்.எல்.ஏ.,வின் மாத ஊதியம், 1 லட்சத்து, 5,000 ரூபாய். 159 எம்.எல்.ஏ.,க்களுக்கு, மாதம் ஒன்றிற்கு, 1.67 கோடி ரூபாய் வழங்கப்படுகிறது.

மக்கள் நலனே பெரிதெனக் கருதும், ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும், நான்கு மாதங்களுக்கு, அவர்களின் சம்பளத்தை கொரோனா நிதிக்கு வழங்கலாமே!இந்த சம்பளத்தை பெற்று தான், குடும்பம் நடத்த வேண்டிய அவசியம், எந்த எம்.எல்.ஏ.,வுக்கும் இல்லை. எனவே சம்பளம் இல்லாமல், மக்கள் பணி ஆற்றலாமே!இதை பார்த்து, எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்களும், தங்களின் ஊதியத்தை வழங்க முன் வருவர்.

மூலக்கதை