ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம் வரும் 28 ல் கூடுகிறது

தினமலர்  தினமலர்
ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம் வரும் 28 ல் கூடுகிறது

புதுடில்லி: ஏழு மாத இடைவெளிக்கு பின், ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம், வரும் 28ம் தேதி கூடுகிறது.நாடு முழுதும் ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி, 2017ல் அமலுக்கு வந்தது. இந்த வரி விதிப்பு தொடர்பான பிரச்னைகளை விவாதித்து, தீர்வு காண்பதற்கு அமைக்கப்பட்ட ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம், காலாண்டுக்கு ஒரு முறை நடந்து வந்தது.

கடந்த ஆண்டு அக்., 5ல் நடந்த கூட்டத்தில், மாநிலங்களின் ஜி.எஸ்.டி., வருவாயில் ஏற்பட்ட சரிவை சமாளிக்க, கடன் பெறுவது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. அதில் தீர்வு காணும் நோக்கில், கூட்டம் நீட்டிக்கப்பட்டு, 12ம் தேதி முடிவடைந்தது.அதன்பின் ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம் நடக்கவில்லை.

இந்நிலையில், 'ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தை கூட்ட வேண்டும்' என, எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. இது தொடர்பாக மேற்கு வங்க நிதியமைச்சர் அமித் மித்ரா, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் எழுதிஇருந்தார். இதையடுத்து, நிர்மலா சீதாராமன் தலைமையில், ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம், வரும் 28ம் தேதி கூடும் என, மத்திய நிதியமைச்சகம் அறிவித்து உள்ளது.'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நடக்கவுள்ள இந்த கூட்டத்தில், அனைத்து மாநில நிதியமைச்சர்கள் பங்கேற்கவுள்ளனர்.

மூலக்கதை