இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலியா செல்வதற்கான விமான சேவை தடையை நீக்கியது ஆஸி. அரசு

தினகரன்  தினகரன்
இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலியா செல்வதற்கான விமான சேவை தடையை நீக்கியது ஆஸி. அரசு

ஆஸ்திரேலியா: இந்தியாவில் ஆஸ்திரேலியா செல்வதற்கான விமான தடை முடிவடைந்தது. இந்தியாவில் சிக்கித்தவித்த ஆஸ்திரேலியர்களை சொந்த நாட்டில் கொண்டு போய்ச்சேர்ப்பதற்கான முதல் விமானம் ஆஸ்திரேலியா சென்றடைந்தது. இந்தியாவில் கொரோனா பரவல் அதிகமாக இருப்பதால் விமான சேவைக்கு ஆஸி. அரசு தடை விதித்திருந்தது. ந்தியாவில் இருந்து தடையை மீறி நாடு திரும்பினால் 5 ஆண்டு வரை சிறையும், 66 ஆயிரம் ஆஸ்திரேலிய டாலர்கள் வரையில் அபராதம் (சுமார் ரூ.37 லட்சம்) விதிக்கப்படும் எனவும் எச்சரித்தது. இந்த தடை உத்தரவு முடிவுக்கு வந்த நிலையில் இந்தியாவில் சிக்கித்தவித்த ஆஸ்திரேலியர்களை சொந்த நாட்டில் கொண்டு போய்ச்சேர்ப்பதற்கான முதல் விமானம் தயாரானது. இதில் 150 பேர் பயணிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 80 பேர் மட்டுமே பயணித்தனர். எஞ்சியவர்களில் பெரும்பாலோர் கொரோனா தொற்று பாதிப்பு உறுதியானதால் பயணிக்க முடியாமல் போய்விட்டது என இந்தியாவுக்கான ஆஸ்திரேலிய தூதர் பேரி ஓ பேரல் தெரிவித்தார். இந்த விமானம் நேற்று ஆஸ்திரேலியாவின் டார்வின் போய் தரை இறங்கியது. 

மூலக்கதை