தொலைதொடர்பு ஊழியர்களுக்கு முன்னுரிமை வழங்க கோரிக்கை

தினமலர்  தினமலர்
தொலைதொடர்பு ஊழியர்களுக்கு முன்னுரிமை வழங்க கோரிக்கை

புதுடில்லி:தொலைதொடர்பு நிறுவனங்களில் களத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு முன்னுரிமை வழங்கி, தடுப்பூசி வழங்க வேண்டும் என, செல்லுலார் ஆப்பரேட்டர்ஸ் சங்கமான சி.ஓ.ஏ.ஐ., அரசை கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும், மாநிலங்கள் இவர்களை முன்கள பணியாளர்களாக அறிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.இந்த சங்கத்தின் இயக்குனர் ஜெனரல் எஸ்.பி.கோச்சார் இது குறித்து மேலும் தெரிவித்துள்ளதாவது:கொரோனா காலத்தில், தொலைதொடர்பு துறை ஊழியர்கள், இந்தியர்களை தடையற்ற இணைப்பில் வைத்திருக்கிறார்கள். வீட்டிலிருந்து பணியாற்றுவது உள்ளிட்டவற்றுக்கு, இவர்களின் பங்களிப்பு மிக முக்கியமானது.

தொலைபேசி மற்றும் இன்டர்நெட் ஆகியவை ஏற்கனவே அத்தியாவசிய பட்டியலில் இணைந்துவிட்டது.இந்நிலையில், தொலைதொடர்பு ஊழியர்கள், தடையில்லா சேவைகளை வழங்கி வருவதால், அவர்களை முன்கள பணியாளர்களாக, மாநில மற்றும் மத்திய அரசு அறிவிக்க வேண்டும்.இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மூலக்கதை