காப்பீடு பிரிமியத்தில் 45 சதவீத வளர்ச்சி

தினமலர்  தினமலர்
காப்பீடு பிரிமியத்தில் 45 சதவீத வளர்ச்சி

இந்திய ஆயுள் காப்பீடு நிறுவனங்கள், பாலிசி பிரிமியம் மூலமான வர்த்தகத்தில் ஏப்ரல் மாதம், 45 சதவீத வளர்ச்சியை பெற்றிருப்பதாக தெரிய வந்துள்ளது.

எல்.ஐ.சி., உள்ளிட்ட ஆயுள் காப்பீடு நிறுவனங்கள் ஏப்ரல் மாதம் பிரிமியம் தொகை மூலம், 9,738.79 கோடி ரூபாய் பெற்றிருப்பதாகவும், கடந்த ஆண்டு இதே காலத்தில் இது, 6,727.74 கோடி ரூபாயாக இருந்ததாகவும் இந்திய காப்பீடு ஒழுங்குமுறை மற்றும் அபிவிருத்தி ஆணைய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

நாட்டின் மிகப்பெரிய காப்பீடு நிறுவனமான, எல்.ஐ.சி., ஏப்ரல் மாதம் முதல் ஆண்டு பிரிமியம் தொகை மூலம், 4,856.76 கோடி ரூபாய் ஈட்டியுள்ளது என்றும் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. முந்தைய ஆண்டின் இணையான காலத்துடன் ஒப்பிடும் போது இது, 36 சதவீத வளர்ச்சியாக அமைகிறது.


தனியார் துறை காப்பீடு நிறுவனங்கள், முதல் ஆண்டு பிரிமியம் தொகையில், 55 சதவீத வளர்ச்சியை பெற்றுள்ளன. பாலிசி அல்லது திட்டங்கள் எண்ணிக்கையை பொறுத்தவரை காப்பீடு நிறுவனங்கள் மொத்தமாக, 140 சதவீத வளர்ச்சியை பெற்றுள்ளன. இதில், எல்.ஐ.சி., நிறுவனம் அதிகபட்ச வளர்ச்சியை பெற்றிருக்கிறது.

மூலக்கதை