மஹா ஓடிடி வெளியீடா

தினமலர்  தினமலர்
மஹா ஓடிடி வெளியீடா

நடிகை ஹன்சிகா முதன்மையாக நாயகியாக நடித்துள்ள அவரது 50வது படம் ‛மஹா'. நடிகர் சிம்பு சற்றே நீண்ட சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். ஜிப்ரான் இசை, ஜமீல் இயக்கி உள்ளார். இப்படம் ஆரம்பித்து சில ஆண்டுகளாகிவிட்டது. ஆனால் இன்னும் வெளிவரவில்லை. இந்நிலையில் இப்படத்தின் தணிக்கை முடிந்துவிட்டதாகவும், ஓடிடி தளத்தில் வெளியாவதாகவும் தகவல் வெளியானது.

இதை மறுத்துள்ள ஜமீல், ‛‛இது பொய்யான செய்தி. இப்படம் ஆரம்பித்து 4 ஆண்டுகள் ஆகிவிட்டது. சிம்பு ரசிகர்கள் எப்படி உணர்வார்கள் என்பது எனக்கு புரியும். இப்படம் பற்றிய சரியான தகவல் தெரிந்து கொள்ள இன்னும் சில நாட்கள் காத்திருங்கள்'' என டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை