பத்து வருடம் கழித்து மீண்டும் தமிழுக்கு வரும் பரத் பட நாயகி

தினமலர்  தினமலர்
பத்து வருடம் கழித்து மீண்டும் தமிழுக்கு வரும் பரத் பட நாயகி

கிட்டத்தட்ட நூறு படங்களுக்கு மேல் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றியவர் ஸ்டண்ட் சில்வா. அதிரடியான சண்டைக்காட்சிகளால் ரசிகர்களுக்கு விருந்து கொடுத்தவர், தற்போது முதன்முறையாக இயக்குனர் அவதாரம் எடுக்க தயாராகி வருகிறார். இந்தப்படத்தின் திரைக்கதையை இயக்குனர் விஜய் எழுதுகிறார். இந்தப் படத்தில் சாய்பல்லவியின் தங்கை பூஜா கண்ணன் கதாநாயகியாக அறிமுகமாகிறார். மேலும் இன்னொரு கதாநாயகியாக முக்கிய வேடத்தில் மலையாள நடிகை ரீமா கல்லிங்கல் நடிக்கிறார்

மலையாள சினிமாவில் சில வருடங்களுக்கு முன்பு வரை பிஸியான கதாநாயகியாக நடித்து வந்தவர் ரீமா கல்லிங்கல். மலையாளத்தில் பிரபல இயக்குனர் ஆசிக் அபுவை திருமணம் செய்த பிறகு குறிப்பிட்ட சில படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். தமிழில் 2011-ல் பரத் நடித்த யுவன் யுவதி என்கிற படத்தில் மட்டும் நடித்து உள்ளார். அந்த வகையில் 10 வருடங்கள் கழித்து மீண்டும் தமிழ் திரையுலகிற்கு வருகிறார் ரீமா கல்லிங்கல்.

மூலக்கதை