கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பே உயிரி ஆயுதங்களுடன் 3ம் உலகப்போருக்கு தயாரான சீனா: அமெரிக்க புலனாய்வு துறை அறிக்கையில் பகீர்

தமிழ் முரசு  தமிழ் முரசு
கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பே உயிரி ஆயுதங்களுடன் 3ம் உலகப்போருக்கு தயாரான சீனா: அமெரிக்க புலனாய்வு துறை அறிக்கையில் பகீர்

வாஷிங்டன்: கடந்த 6 ஆண்டுகளாக கொரோனா போன்ற உயிரி ஆயுதங்களுடன் 3ம் உலகப்பேருக்கு சீனா தயாராகி வருவதாக அமெரிக்க வெளியுறவு துறையின் புலனாய்வு பிரிவு வெளியிட்ட அறிக்கையில் பகீர் தகவல்கள் வெளியாகி உள்ளன. சீனாவின் வூஹான் மகாணத்தில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் தொற்று கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக உலகையே புரட்டிப் போட்டுள்ளது.

பல லட்சக்கணக்கான மக்கள் கொரோனாவால் பலியான நிலையில், தற்போது பல நாடுகளும் மக்களுக்கு தடுப்பூசி போட்டு காப்பாற்றி வருகின்றன. இருந்தும், கொரோனாவின தாக்கத்தில் இருந்து எந்த நாடும் வெளியாக முடியவில்லை.கொரோனா பரவலுக்கு முக்கிய காரணம் சீனா தான், அமெரிக்கா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளும் குற்றம்சாட்டி வந்தாலும் கூட, சீனா அதனை மறுத்து வருகிறது. உலக சுகாதார நிறுவனமே, சீனாவிற்குள் நடக்கும் சுகாதார முறைகளை அறிய முடியாத நிலையே நீடித்து வருகிறது.

இந்நிலையில், அமெரிக்க வெளியுறவு துறையின் புலனாய்வாளர்கள் பிரிவு தற்போது வெளியிட்ட அறிக்கையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. அமெரிக்காவின் ‘மெயில் ஆன்லைன்’ பத்திரிக்கை வெளியிட்டுள்ள செய்தியில், ‘சீன விஞ்ஞானிகள் கடந்த ஆறு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் உள்ளிட்ட உயிரி மற்றும் மரபணு ஆயுதங்களை தயாரித்து வருகின்றனர்.இவர்கள் உயிரி ஆயுதங்களை பரப்பி, மூன்றாம் உலகப் போருக்கு தயாராகி வருகின்றனர். கடந்த 2015ம் ஆண்டில் ‘சார்ஸ்’ வகை கொரோனா வைரசை பரிசீலித்தது.

இதுவே கோவிட்-19 வைரஸ் உருவாக்கியதற்கான அடிப்படையாக இருந்தது.
மக்கள் விடுதலை ராணுவ விஞ்ஞானிகள் மற்றும் சுகாதார அதிகாரிகளிடம் பெறப்பட்ட தகவலின்படி, ‘தி ஆஸ்திரேலியன்’ பத்திரிகையிலும் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.

‘சார்ஸ்’ கொரோனா வைரஸ்களின் திறனை ேசாதிக்கும் போது, சீன ஆய்வகத்தில் பணியாற்றிய அதிகாரிகளிடம் இருந்து கொரோனா வைரஸ் பரவியிருக்க வாய்ப்புள்ளது. கொரோனா வைரஸ் சீன ஆய்வகத்தில் தோன்றியதா?

என்ற மர்மம் நீடிக்கும் நிலையில், வூஹான் வைராலஜி நிறுவனம் ‘சார்ஸ்’ தொற்று பரவியதில் இருந்தே வவ்வால்களின் மூலக்கூறுகளில் இருந்து ஏராளமான வைரஸ்களை சேகரித்து வருகிறது.

இந்த வவ்வால் வைரஸ்கள், மனித செல்களுடன் எவ்வாறு தொடர்பு கொண்டுள்ளன என்பதற்கான ஆய்வு முடிவுகளும் கிடைத்துள்ளன. கொரோனா பேரிடர் பரவியதற்கு முன்பாகவே, கொரோனா வைரசை ஆயுதமாகப் பயன்படுத்தி சீனா மூன்றாம் உலகப்போருக்கு திட்டமிட்டுள்ளது.

புதிய யுகத்தின் ஆயுதமாக தொற்று நோய்க்கிருமிகளை ஏவ சீனாவின் ராணுவ விஞ்ஞானிகள் திட்டமிட்டனர். அவற்றை செயற்கையான முறையில் உற்பத்தி செய்ய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளனர்’ என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவுக்கு கிடைத்த புதிய ஆவணங்களால் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

.

மூலக்கதை