மின்னல் வேகத்தில் பரவும் கொரோனா: டெல்லியில் 17-ம் தேதி வரை மீண்டும் ஊரடங்கை நீட்டித்து கெஜ்ரிவால் அறிவிப்பு

தினகரன்  தினகரன்
மின்னல் வேகத்தில் பரவும் கொரோனா: டெல்லியில் 17ம் தேதி வரை மீண்டும் ஊரடங்கை நீட்டித்து கெஜ்ரிவால் அறிவிப்பு

டெல்லி: டெல்லியில் வரும் 17ஆம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். நாளையுடன் ஊரடங்கு நிறைவடைய இருந்த நிலையில், 17ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் தினமும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் மீண்டும் 3-வது முறையாக முழு ஊரட்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.  ஊரடங்கு கட்டுப்பாடுகளால் டெல்லியில் கொரோனாவின் தாக்கம் முன்பைவிட சற்று தணியத்தொடங்கியுள்ளது. இந்த நிலையில், தொற்று பரவலை மேலும் கட்டுப்படுத்தும் வகையில் டெல்லியில்  மேலும் ஒருவாரத்துக்கு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். இம்முறை ஊரடங்கு மிகக்கடுமையாக இருக்கும் எனவும் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். மே 17 ஆம் தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் எனவும் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படாது என்றும் டெல்லி அரசு தெரிவித்துள்ளது. மின்னல் வேகத்தில் பரவிய கொரோனா பாதிப்பை சமாளிக்க டெல்லியில்  கடந்த  ஏப்ரல் 19ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு  பிறப்பிக்கப்பட்டது. அதன்பிறகு அடுத்தடுத்து ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. 

மூலக்கதை