மே 11 முதல் ஸ்டெர்லைட் ஆக்சிஜன் கிடைக்கும்: அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி

தினகரன்  தினகரன்
மே 11 முதல் ஸ்டெர்லைட் ஆக்சிஜன் கிடைக்கும்: அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி

சென்னை: ஊரடங்கை அமல்படுத்த தொழிலதிபர்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று முதலமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார் என தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். தொற்று பரவல் சங்கிலி அறுபடுவதில்தான் ஊரடங்கின் வெற்றி அடங்கி உள்ளது. ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தியாகும் ஆக்சிஜன் மே 11-ம் தேதி முதல் கிடைக்கும். ஸ்டெர்லைட் மூலம் தமிழகத்திற்கு 31 மெட்ரிக் டன் ஆக்சிஜன் கிடைக்கும். தமிழகத்தில் ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க தொழில்துறை முடுக்கிவிடப்பட்டுள்ளது எனவும் கூறினார்.

மூலக்கதை